www.arusuvai.com
மீன் குழம்பு
தேவையானப் பொருட்கள்
- மீன் - 1/2 கிலோ
- புளி - ஒரு எழுமிச்சை அளவு
- சின்ன வெங்காயம் - 30
- வத்தல் - 8
- சீரகம் - 5 மேசைக்கரண்டி
- மஞ்சள்தூள் - சிறிது
- உப்பு -தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை
- முதலில் மீனை சுத்தம் செய்துக்கொள்ளவும்.
-
- புளியை கரைத்து தனியாக வைக்கவும்.
-
- வத்தல், சீரகத்தை மைபோல் அரைக்கவும்.
-
- வெங்காயத்தை மட்டும் தனியாக கரகரப்பாக அரைக்கவும்.
-
- கரைத்து வைத்த புளிகரைசலில் மசாலாவை போட்டு,அரைத்த வெங்காயம்,மஞ்சள்தூள், உப்பு போட்டு கலந்துவைக்கவும்.
-
- அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் புளிகரைசலை ஊற்றி கொதித்ததும் மீன் துண்டுகளைப்போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.குழம்பில் எண்ணெய் மிதந்து மீன் வெந்ததும் .மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
-