நாட்டுக்கோழி இஞ்சி வறுவல்

தேதி: March 12, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சித்ரா அவர்களின் நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சித்ரா அவர்களுக்கு நன்றிகள்.

 

நாட்டுக்கோழி கறி - 500 கிராம்
மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 100 மில்லி
இஞ்சி சாறு - 100 கிராம்
மஞ்சள் தூள் - 3 தேக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
கறி மசாலா பொடி - சிறிது
கொத்தமல்லித் தழை - சிறிதளவு


 

கோழி கறியைச் சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும்.
இஞ்சியை தோல் சீவி அரைத்து சாறு பிழிந்து எடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, வினிகர், மிளகாய்த் தூள் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
அதனுடன் சுத்தம் செய்த கோழி கறியை போட்டு நன்றாக பிசையவும். பிறகு அதில் கறி மசாலா பொடியையும் சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊற விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசறிய கோழிக் கறியை போட்டு வதக்கவும்.
கறி வெந்து பொன்னிறமாக வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
சுவையான நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இந்த வறுவல் அதிக சுவையாக இருந்தது. இப்போது எங்கள் வீட்டு மெனுவில் அடிக்கடி இடம் பெறுகின்ற ஒன்றாகி விட்டது.
இக்குறிப்பின் உரிமையாளர் திருமதி. சித்ரா அவர்களுக்கு நன்றிகள் பல. _()_