எளிய புதினா புலவு

தேதி: March 12, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

திருமதி. லெட்சுமி ஸ்ரீ சுந்தர் அவர்களின் எளிய புதினா புலவு குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லெட்சுமி ஸ்ரீ அவர்களுக்கு நன்றிகள்.

 

புதினா - ஒரு கட்டு
கொத்துமல்லி - அரை கட்டு
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கிராம்பு - 4
வெங்காயம் - 2
பட்டாணி - கால் கப்
பாஸ்மதி அரிசி - ஒரு கப்


 

புதினா, கொத்தமல்லியை கழுவி விழுதாக அரைத்துக் கொள்ளவும். தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்து தனியாக அரைத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு தாளித்து, நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய்த் தூள் மற்றும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் பட்டாணி, அரைத்த மல்லி, புதினா விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் .
பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் அரிசியை போட்டு குக்கரை மூடி, விசில் வந்ததும் சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் வேக விடவும்.
வெந்ததும் இறக்கி ரைத்தாவுடன் பரிமாறவும். இந்த வகை புலவு நன்கு பசியை தூண்ட கூடியது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Simply super vani. Kq Ku vazthukkal

Be simple be sample

சிம்பிள் அண்ட் குட் :) சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா