பட்டாணி ப்ரைட் ரைஸ்

தேதி: March 12, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

திருமதி. ஜெயமுருகேஸ்வரி அவர்களின் பட்டாணி ப்ரைட் ரைஸ் குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜெயமுருகேஸ்வரி அவர்களுக்கு நன்றிகள்.

 

அரிசி - கால் கிலோ
வெங்காயம் - 75 கிராம்
இஞ்சி - 5 கிராம்
பூண்டு - 5 கிராம்
பட்டாணி - 50 கிராம்
ஏலக்காய் - 2
பட்டை - சிறிய துண்டு
இலவங்கம் - 2
எண்ணெய் - 75 மில்லி
பச்சை மிளகாய் - 5 கிராம்
உப்பு - தேவையான அளவு


 

பட்டாணியை ஊற வைத்துத் தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை மெல்லிய அகலமான துண்டுகளாகவும் பச்சைமிளகாயை நீளவாக்கிலும் நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அரிசியை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவி எடுத்து வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய் போட்டு சிவக்க வதக்கவும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காய சற்று வதங்கியதும் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்பு பச்சைமிளகாய் போடவும்.
வதக்கியவற்றுடன் கழுவி வைத்த அரிசியையும், வேக வைத்த பட்டாணியையும் சேர்த்து ஒரு முறை வதக்கி விடவும்.
அரிசியுடன் ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும்.
சாதம் பதமாகும் வரை சமைக்க வேண்டும். பதமான பின்பு சில நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து பின்னர் எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Today lunch very nice this recipes