ஆப்பம்

தேதி: March 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

பச்சரிசி - 3 ஆழாக்கு
சர்க்கரை - 2 தேக்கரண்டி
சமையல் சோடா - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

பச்சரிசியை சுத்தம் செய்து கழுவி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
அரிசி ஊறியதும் மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில் 2 கரண்டி அளவு மாவை எடுத்து வாணலியில் ஊற்றி, ஒரு கப் தண்ணீரும் ஊற்றி கஞ்சி பதத்தில் காய்ச்சி ஆறவிடவும்.
கஞ்சி நன்கு ஆறியதும் அரைத்த மாவில் ஊற்றிக் கரைத்து 10 மணி நேரம் புளிக்கவிடவும்.
மறுநாள் புளித்த மாவில் சர்க்கரை, சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும்.
ஆப்ப தவாவில் 2 கரண்டி மாவை ஊற்றிச் சுழற்றிவிட்டு, மிதமான தீயில் வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான ஆப்பம் தயார். இதற்கு தேங்காய் பால், வெஜ் ஸ்டூ, சிக்கன் ஸ்டூ, பாயா அருமையான காம்பினேஷன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா!! ஆப்பம்! கலர் சூப்பர்!

கொஞ்சம் வித்தியாசமா அம்மா செய்வாங்க. செய்யனும் என்று நினைச்சிட்டு இருக்கும் போது உங்க குறிப்பு கிடைச்சு இருக்கு நன்றி.

எனது குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினர்க்கு நன்றி.

Be simple be sample

Thanku anu.

Thabku tharsa.Amma kurippum anupuga. Thanku

Be simple be sample