காசி ஹல்வா

தேதி: March 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மஞ்சள் (அ) வெள்ளை பூசணி - ஒரு துண்டு
குங்கும‌ப்பூ - 10 இதழ்கள்
நெய் - 100 மில்லி
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
சர்க்கரை - 50 கிராம்
முந்திரி - 10


 

பூசணியைத் துருவிக் கொள்ளவும்.
துருவிய‌ பூசணியை துணியில் போட்டு நன்கு முறுக்கிப் பிழியவும்.
பிழிந்த‌ தண்ணீர் தனியாகவும், பூசணி சக்கையைத் தனியாகவும் வைக்கவும்.
வாணலியில் பூசணி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க‌ விடவும்.
நன்கு கொதித்ததும் பூசணி சக்கையைச் சேர்க்கவும்.
பிறகு குங்கும‌ப்பூ, ஏலக்காய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி, மூடி போட்டு பச்சை வாசம் போக‌ நன்கு வேக‌ வைக்கவும். 2 நிமிடங்களுக்கு ஒரு முறை திறந்து கிளறிவிடவும்.
பச்சை வாசம் போனதும் நெய் சேர்த்துக் கிளறவும்.
ஹல்வா நன்கு சுருண்டு வந்ததும் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.
பிறகு நெய்யில் வறுத்த‌ முந்திரி (அ) பாதாம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சுவையான‌ காசி ஹல்வா தயார்.

குங்கும‌ப்பூ நல்ல‌ நிறத்தை தரும். அதனால் கலர் பவுடர் சேர்க்கத் தேவையில்லை.

தண்ணீர் பிழிந்து தனித்தனியாக‌ச் செய்வதால் க்ரஞ்சியாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹல்வா படத்தை பார்க்கும்போதே சுவை ம்ம்ம்.... சூப்பர்

"எல்லாம் நன்மைக்கே"

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள். இவ்ளோ சீக்ரம் எதிர் பார்க்கல‌. மனமார்ந்த‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி பாக்கியா. சுவை ரொம்ப‌ நல்லா இருக்கும். செய்து பாருங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

ஹல்வா சூப்பரா ஈருக்கு வாழ்த்துக்கள்..

நன்றி தர்ஷா. செய்து பாருங்க‌. டேஸ்ட் ரொம்ப‌ நல்லா இருக்கும்

எல்லாம் சில‌ காலம்.....

Supera iruku. Yummy

Be simple be sample

thanks rev's

எல்லாம் சில‌ காலம்.....