மசாலா டீ

தேதி: March 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

பால் - அரை லிட்டர்
டீத்தூள் - 3 தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
புதினா - 6 இலைகள்
ஏலக்காய் - ஒன்று
சோம்பு - கால் தேக்கரண்டி
சர்க்கரை - தேவைக்கேற்ப‌


 

பாலில் தேவையான‌ அளவு தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சவும்.
காய்ச்சிய பாலுடன் டீத்தூள் சேர்க்கவும்.
பிறகு புதினா, நசுக்கிய‌ இஞ்சி, சோம்பு மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து, சர்க்கரையையும் சேர்க்கவும்.
டீ வடிகட்டியில் வடிகட்டினால் சுவையான‌ மணமான மசாலா டீ தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Super... ippadi oru tea mazai neram kidaichaa aagaa oohoo dhaan.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டீயில் சோம்பு சேர்ப்பாங்களா? வித்தியாசமான‌ டீ! நல்லாயிருக்கு......

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள். இவ்ளோ சீக்ரம் எதிர் பார்க்கல‌. மனமார்ந்த‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....

இந்த‌ டீ மசாலா வாசனையுடன் ரொம்ப‌ நல்லா இருக்கும். என் கணவருடன் ஒரு டீ ஷாப்பில் குடித்தோம். சுவை பிடித்து போக‌ செய்முறை கேட்டோம் சொல்லவில்லை. நானே யூகித்து வீட்டில் ட்ரை செய்தேன் வந்து விட்டது.

எல்லாம் சில‌ காலம்.....

இந்த‌ டீயில் சேர்க்கலாம். ரொம்ப‌ சிறிது. 10 முதல் 15 எண்ணிக்கை போதும். சோம்பின் மனம் புதினா சுவையுடன் அருமையாக‌ இருக்கும்.

எல்லாம் சில‌ காலம்.....

Mmm vaasam IGA varaikum vanthaduchu super

Be simple be sample

Innaiku evening try pannen.. romba pidichudhu. Supera irundhadhu. Thanks for the recipe bala :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்கடா இங்க‌ வாசனைய காணோமேனு பாத்தேன். அங்க‌ ரேவ்'ஸ் கிட்ட‌ போயிடுச்சா?

எல்லாம் சில‌ காலம்.....

தேங்க்யூ அக்கா.

எல்லாம் சில‌ காலம்.....

vijilarajan விஜிலா ராஜன்
நானும் உங்க ஊருதான்

ஹை விஜிலா ராஜன். பதிவிற்கு நன்றி. அறுசுவைக்கு வரவேற்கிறோம். திருசெந்தூர் உங்களுக்கு புகுந்த‌ ஊறா?

எல்லாம் சில‌ காலம்.....