டூனா மசாலா

தேதி: March 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

டூனா டின் - 2
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய், கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க


 

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மசாலா பொடிகளைச் சேர்த்து கலந்து விடவும்.
பிறகு டூனாவைச் சேர்க்கவும்.
அத்துடன் நீளமாகக் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான டூனா மசாலா ரெடி. ரசம் சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாணி இந்த‌ கிரேவிக்கு புளி சேர்க்கத் தேவையில்லையா?

கிரேவி பார்க்கவே சூப்பரா இருக்கு. வானியோட‌ சுவை கேட்கவா வேணும்? அருமை. ஆனா கோச்சிகாதிங்க‌ டூனா னா என்ன‌?

எல்லாம் சில‌ காலம்.....

இது போல நானும் செய்வேன்.இப்பொ செய்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.உங்க குறிப்பு பார்த்த பிறகு செய்யனும் போல இருக்கு.சூப்பரா இருக்கு..

புளி சேர்க்க தேவையில்லை அனு. புளி சேர்த்தால் சுவை மாறி விடுகிறது :) நன்றி

நன்றி :)டுனா என்பது முள் நீக்கி பதப் படுத்தப் பட்ட சூரை
மீன். டின்களில் அடைத்து விற்கின்றார்கள்.

நன்றி Tharsha