மரவள்ளி கிழங்கு உருண்டை

தேதி: March 14, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

மரவள்ளி கிழங்கு - அரைக் கிலோ
சர்க்கரை (அ) வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் - 2
தேங்காய் துருவல் - கால் கப்


 

மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
துருவிய‌ கிழங்கை இட்லி பானையில் வைத்து ஆவியில் வேக‌ வைத்து எடுக்கவும்.
வேக‌ வைத்த‌ கிழங்குடன் தேங்காய் துருவல், சர்க்கரை (அ) துருவிய வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். இப்படியே கிழங்கு புட்டாகவும் பரிமாறலாம்.
இந்த கலவையை உருண்டையாக‌ உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்து கிழங்கு உருண்டையாகவும் பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Super ponga. Asathal

Be simple be sample

புதுமையான குறிப்பு சத்தானதும் கூட வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி ரேவ்'ஸ்

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி ஸ்வர்ணா

எல்லாம் சில‌ காலம்.....

வர வர புது புது குறிப்புகளோட, அதுவும் ஹெல்தி குறிப்புகளோட அசத்துறீங்க :) உங்க மசாலா டீயில் போஸ்ட் போட்டிருக்கேன் பாருங்கோ...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு ரொம்ப பிடித்தமான புட்டு இது. எங்க அம்மாவும் இதே முறையில் புட்டு செய்து தருவாங்க. நாங்க கிழங்கை துருவி விட்டு பாலை பிழிந்து, பின் வேக வைப்போம். படங்கள் சூப்பர் .

வனி அக்கா எல்லாம் உங்க‌ ஆசிர்வாதம்.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி வாணி

எல்லாம் சில‌ காலம்.....