நெஞ்செலும்பு ரசம்

தேதி: March 14, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

நெஞ்செலும்பு (மார்கண்டம்) - 150 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தனியா - 25 கிராம்
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி


 

வெங்காயம், தக்காளி சிறுத் துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கவும். எலும்பை சுத்தம் செய்துக் கொள்ளவும். சீரகம் மற்றும் தனியாவை பொடி செய்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் சேர்ந்து வதங்கியதும் சுத்தம் செய்த எலும்பை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டவும்.
அதனுடன் பொடி செய்த தனியா சீரகத்தூளை சேர்த்து பிரட்டி விடவும்.
எலும்புடன் 4 அல்லது 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 8 முதல் 10 விசில் வரும் வரை வேக விடவும்.
குக்கரை திறந்து மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான நெஞ்செலும்பு ரசம் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினர்க்கு நன்றி.

Be simple be sample

ரேவ்ஸ்... எந்த ஊர் சமையல் இது! தலைப்பு tongue twister மாதிரி இருக்கு. :-)

‍- இமா க்றிஸ்

சூப்பர்ர்ர்ர்ர் ரசம் பார்க்கவே சாப்பிட தோனுது :) நெஞ்செலும்புன்னு தானே சொல்லுவோம் ஏன் தலைப்பு இப்படி குழம்பியிருக்கு ;) நெஞ்சுலெம்பு தப்பா போட்டுட்டாங்களோ ?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தான்க்யூ இமாம்மா. இது எந்த ஊர் ஸ்பெஷல்ன்னு தெரியல. ஆனா இது சளி பிடிச்சிருக்கற டைம்ல குட்டிஸ்க்கு அடிக்கடி செய்து குடுத்தா நல்லதுன்னு சொல்லுவாங்க. இது சூப் போல தனியாகவே குடிக்கலாம்.

Be simple be sample

thanku Swa.neeGA sonnamathirusonna mathirithaan name podanum.naanthaan thappa kuduthutaen.

Be simple be sample

//naanthaan thappa kuduthutaen.// ;)))

// தலைப்பு tongue twister மாதிரி இருக்கு. :-) // என்று சொன்னது உங்க தலைப்பு தப்பா இருந்ததைத்தான் ரேவ்ஸ். நான் மாமிசம் சாப்பிடுறது இல்லை. உங்கள் இந்தத் தப்புத்தான் இங்கு கமண்ட் போட வைத்தது. :-)

டீம்... குறிப்பின் தலைப்பிலும் கடைசிப் பந்தியில் ஒரு இடத்திலும் திருத்தம் செய்ய வேண்டும்.

‍- இமா க்றிஸ்

:D naanum command potathuku aparam yosikiraen. Title thana sonnaganu. Aparam teamkita solli IPA mathiyachu. Sorry :)

Be simple be sample

சூப்பரா இருக்கு. ரொம்ப‌ நல்ல சூப் இது. நான் சீரகம் மல்லியுடன் மிளகும் சேர்த்து அரைத்து விடுவேன்.

எல்லாம் சில‌ காலம்.....

ரேவ்ஸ்... அசைவ குறிப்பு பக்கம் இமாவை வர வைக்க வழி தெரிஞ்சு போச்சு :) நல்ல குறிப்பு ரேவ்ஸ்... நான் இப்படிலாம் வாங்கி செய்ததே இல்லை. ட்ரை பண்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thanks bala. Naanum pepper poduvaen pasaga sapida mataraga athan.

Be simple be sample

Kikikiki . avagavaga edukara mudivu namaku sathagamathaan iruku. Adikadi pasagaluku seithu kuduga vani. Healthy

Be simple be sample

இதை சூப் போன்று அப்படியே குடிக்கலாமா ரேவதி ? வெரி டெம்டிங்.

Ama pa. Apdiye kudikathaan innum super a irukum riceku sapidaratha Vida. Chilli powder podama pepper innum konjam potukalam. Super a irukum kudikarthuku. Thanku vani

Be simple be sample

என்ன அம்மிணி ஒரே மட்டன் சிக்கன் முட்டைன்னு கலக்குறீங்க.. ம்ம் கலக்குங்க.. நெஞ்செலும்பு ரசம் சூப்பரா கார சாரமா இருக்கு.. சூப்பர் சூப்பர்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

Thanku rev

Be simple be sample