ஹரியாலி பிஷ் மசாலா

தேதி: March 16, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் - அரைக் கிலோ
புதினா - கால் கட்டு
கொத்தமல்லித் தழை - கால் கட்டு
தக்காளி - 2
பெரிய‌ வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு


 

மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். மற்ற தேவையானவைகளை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து அதை மீனின் மீது தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
மிக்ஸியில் புதினா, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு தக்காளியை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் புதினா, கொத்தமல்லித் தழை விழுதை சேர்த்து வதக்கவும். அதனுடன் சிறிதளவு மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
அதில் ஊற வைத்த மீனை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். மீன் வெந்ததும் இறக்கி பரிமாறவும். அடிக்கடி பிரட்ட வேண்டாம்.
சுவையான ஹரியாலி பிஷ் மசாலா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலர்ஃபுல் ஃபிஷ்... ரொம்ப நல்லா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரா இருக்கு. அருமையா செய்து இருக்கீங்க‌. நானும் இதை ட்ரை செய்து பார்க்கிறேன்.

எல்லாம் சில‌ காலம்.....

வனி: நன்றிப்பா, மீன் சூப்பரா இருந்தது, ஒரு கமெண்ட் டும் வரலியேன்னு பார்த்தேன், இப்போ நிம்மதி.

பாலநாயகி: நன்றிப்பா, கண்டிப்பா ட்ரை பண்ணுங்க‌ அப்புறம் அடிக்கடி செய்வீங்க‌:)

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹரியாலி பிஷ் நல்ல பெயர்.. சூப்பரா கலர்புல் டிஸ் ஹேமா.. வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா, ட்ரை பண்ணுங்க சூப்பர்னு சொல்லுவீங்க

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

குறிப்பினை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

Yummya iruku Hema. Seithu parkiraen

Be simple be sample

கலர்ஃபுல் ஃபிஷ் பார்க்கவே சூப்பரா இருக்கு :) அப்படியே எனக்குதான்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேவ்ஸ் , சுவா: வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.
சுவா மீன் எடுங்க‌ சாப்பிடுங்க...

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா