பருப்பு துவையல்

தேதி: February 4, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு 150கிராம்
மிளகாய் வத்தல் 4
பெருங்காயம் 1துண்டு
தேங்காய் துருவல் 2மேஜைக் கரண்டி
கடுகு 1தேக்கரண்டி
எண்ணெய் 1தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு


 

வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகை போடவும்.
கடுகு வெடித்தவுடன்,மிளகாய் வத்தலை சேர்க்கவும்.
மிளகாய் வறுபட்டவுடன்,பெருங்காயத்தை போடவும்.
பெருங்காயம் பொரிந்தவுடன்,துவரம் பருப்புபோட்டு சிவக்க வறுக்கவும்.
சிறிது ஆறிய உடன் தேங்காய் துருவல்,உப்பு தண்ணீர் சேர்த்து மிக்ஸில்
நைசாக அரைக்கவும்.
சூடான சாதத்தில் இந்த துவையலை போட்டு சிறிது நெய் விட்டு சாப்பிட்டால்
மிக மிக சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்