பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ்

தேதி: March 17, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

மட்டன் - அரைக் கிலோ
பச்சைமிளகாய் விழுது - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
பட்டை - ஒரு துண்டு
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து


 

மட்டனை நன்கு சுத்தமாக அலசி விட்டு அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள், தனியாதூள் சேர்த்து பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
குக்கரில் ஊறிய மட்டன் கலவையை போட்டு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து பிசைந்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 6 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கறிவேப்பிலை தாளித்து அதில் கரம் மசாலா தூள் சேர்க்கவும்.
தாளித்தவற்றுடன் வேக வைத்த மட்டனை சேர்த்து பிரட்டி விட்டு நன்கு சிவக்க வந்ததும் எடுக்கவும்.
சுவையான பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரு... அப்படியே ப்ளேட்டோட இங்க அனுப்பிடுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரா இருக்கு. ரொம்ப‌ சிம்பிளாவும் இருக்கு. நாளைக்கு என் வீட்டில் இதான்.

எல்லாம் சில‌ காலம்.....

நானும் கிட்டதட்ட இதே போன்று செய்வதுண்டு ஸ்வர்ணா, ஆனால் என்னவோ வறுவல் போன்றே வரும். இது கொஞ்சம் மசாலாவோட இருக்கே ! வெரி டெம்ப்டிங் :)

பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ் சூப்பர் சுவா.. மட்டன் ரெபிசி கலக்குது. ம்ம் சூப்பர் சாப்ஸ் பிளேட்டோடு எஸ்ஸாரேன்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சாப்ஸ் சூப்பராருக்கு, நாளைக்கு முதல் ட்ரையல் பாத்துடவேண்டியத்தான், அம்மாட்ட‌ சொல்லிட்டுருக்கேன் ஈஇப்போ , ஹஹ்ஹா.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

அடேங்கப்பா என்னா ஸ்பீடு என்னா ஸ்பீடு டீம் :) அறுசுவை குழுவினருக்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி மிக்க நன்றி அனுப்பிடுவோம் ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி செய்துட்டு பிடிச்சுதான்னு சொல்லுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாணி மிக்க நன்றிங்க ட்ரையாகும் வரை வறுக்காம கொஞ்சம் மசாலாவோட எடுத்துடனும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரே மிக்க நன்றி :) ஹ்ம்ம் எடுத்துக்கோ ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹேமா மிக்க நன்றி செய்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுஞ்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப‌ சுலபமாக‌ இருக்கு அருமையான‌ குறிப்பு நன்றி...

ஏன் பேச்சுலர்ஸ் மட்டும் தான் செய்து சாப்பிடனுமா ? நானும் செய்து சாப்பிடுவேன்...