நாவில் ஊறும் முந்திரி பக்கோடா

தேதி: February 4, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முந்திரி பருப்பு 50கிராம்
கடலை மாவு 200கிராம்
அரிசி மாவு 200கிராம்
வெங்காயம் பெரியது 3
புதினா ¼ கட்டு
பச்சை மிளகாய் 2 அல்லது 3
இஞ்சி 1துண்டு
பூண்டு 5 அல்லது 6 பல்லு
சோம்பு 1தேக்கரண்டி
சமையல் சோடா 1சிட்டிகை
எண்ணெய் பொரிப்பதற்கு
உப்பு தேவையான அளவு


 

முந்திரி பருப்பை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
புதினாவை மண் இல்லாமல் கழுவி பொடியாக அரிந்து கொள்ளவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு,இவற்றை மிக்ஸில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலாமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சமையல் சோடா, உடைத்த முந்திரி பருப்பு, வெங்காயம், புதினா இவற்றுடன் மிக்ஸியில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
சிறிது எண்ணெயை சூடாக்கி கலவையில் கொட்டவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை சூடாக்கவும்.
மாவு கலவை சிறிது எடுத்துக் கொண்டுபிசிறினால் போல் காய்ந்த எண்ணெயில் போட்டு பொரிக்கவும். சிவந்தவுடன் எடுத்து வடிய விடவும்.
இனிமையான மாலை நேர Tea timeக்கு மொறு மொறு முந்திரி பக்கோடா ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று முந்திரி பக்கோடா செய்து பார்த்தேன்....எனக்குக் கிடைத்த பார்ரட்டுக்கள் எல்லாம் உங்களுக்கே சேரும்....அவ்வளவு அருமையாக வந்தது.

தளிகா:-)

இன்று உங்கள் முந்திரி பக்கோடா செய்து பார்த்தேன்.முந்திரி பக்கோடா ரொம்ப டேஸ்ட்டாக இருந்தது.எனக்குக் கிடைத்த பார்ரட்டுக்கள் எல்லாம் உங்களுக்கே சேரும்....