சுபிதா கவிதைகள் - 12 - அறுசுவை கவிதை பகுதி - 31133

Kavithai Poonga

சுபிதா கவிதைகள் - 12

வருமோ?

உன்னை நினைத்தேன்
விழிகளின் ஓரம்
நனைந்தது கண்ணீர் துளிகளால்,

இருந்தும் இதழ்கள் சிறிதாய்
புன்னகைப் பூத்தது,

துடைக்க உன் விரல்கள்
வரும் என்ற நம்பிக்கையில்...

- M. சுபி

விடியல் .......

கண்ணாளனைக் கண்டதும் நிலவானது ஒளிய,
பனித்துளியும் வெட்கத்தில் மறைய,

மரங்களின் கிளைகளும்
இலைகளும் வெண்சாமரம் வீச,

காற்றானது தென்றலாய் வருட,
குயில்கள் ரீங்காரம் பாட,

கடலையும் தீண்டுவது போல்
மெதுவாய் அழகாக
பிராகாசமாய் வெளி வருவார் சூரியன்....

- M. சுபி

 
நீயே......

நீ என் இதயத்தை பூ என்றாய்
அன்று எனக்கு அதற்கு அர்த்தம் புரியவில்லை
இன்று அதை உணர்ந்தேன்
என் இதயத்தை நீ பறித்து சென்றபின்......

நீரில் பார்க்கும் பிம்பம் கலைவது போல்
கனாவில் பார்த்த உன் முகம் மறைவது ஏன்?

இல்லை என்று தெரிந்தும்
இருக்கு என்று அடம் பிடிக்குதே மனது,

உன்னை நினைத்து
அழுது கொண்டிருக்கையில்
அதற்கு விடை தேடியே
விடிந்துவிட்டது என் விடியல் ......

- M. சுபி

பெண்மையை போற்றுவோம்......

பெண்மை ஒரு தவம்,
கடவுள் கொடுத்த வரம்,

பூமி தாயும் அவளே,
சுதந்திர தேவியும் அவளே,

நதியும் அவளே,
புயலும் அவளே,

சக்தி, செல்வம், வீரம்
ஒருங்கே அமைந்த
முப்பெருந்தேவியும் அவளே,

பெண்மை அழகான காவியம்
அதை முழுதும் படித்தவர்கள்
எவரும் இல்லை இவ்வுலகில்,

அழகாய் புன்னைகைக்கும்
பூவும் அவளே,
அதனால் தான் ஏனோ
சில நேரம் மிதித்து கசக்கபடுகிறாளோ?

குடும்பத்தில் ஒளி தரும்
விளக்கே அவள் தான்......
அவள் தீபமாய் ஒளிரவும் செய்வாள்,
தீது என்றால் கயவரை எரிக்கவும் செய்வாள்,

பாரதி கண்ட புதுமை
பெண்ணல்லவா அவள்........

- M. சுபி

 சுபிதா கவிதை

கவிதை ஒவ்வொன்றும் அருமை.

வரும்ங்கிற நம்பிக்கையில தானங்க, சிரிப்பு வருது, அப்புறம் எதுக்கு "வருமோ?" அப்படீனு தலைப்பு வச்சிட்டீங்க.

\\என் இதயத்தை பூ என்றாய்
அர்த்தம் உணர்ந்தேன்
என் இதயத்தை நீ பறித்து சென்றபின்\\

சூப்பர்ங்க.. எனக்கும் இன்னைக்குதான் அர்த்தம் தெரிது.

ஆமாங்க., உண்மைலேயே அழகான விடியல் தான்.
மகளீர் தின கவிதை நன்று.

உன்னை போல் பிறரை நேசி.

தாங்ஸ்.......கவிதை வெளியிட்டமைக்கு

அட்மின் பாபு அண்ணா அன்ட் அறுசுவை டீம்,
எனது கவிதையை அழகாக‌ வெளியிட்டமைக்கு ரொம்ப‌ நன்றி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கிறிஸ் அக்கா,

உங்கள் வருகைக்கும் , பதிவிற்கும் ரொம்ப‌ நன்றி.
ம்ம் ரொம்ப‌ ஆழமா உள்ள‌ போய் படிச்சி இருக்கீங்க‌ போல‌ ...

மகளிர் தினத்துக்கு எழுதின‌ கவிதை தான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுபி

விடியல் வர்ணனை சூப்பர்..
அனைத்தும் அருமை.

கவிதைகள்

கவிதைகள் அனைத்தும் நல்ல ரசனை.
சூப்பர் சுபிதா.:))

நிகி அக்கா,

உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் ரொம்ப‌ நன்றி.
///விடியல் வர்ணனை சூப்பர்///
நான் அதை அடிக்கடி ரசிச்சு பார்த்தது உண்டு.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

வாணி அக்கா,

த‌ங்களின் வருகைக்கும்,
மேலான‌ கருத்திற்கும் ரொம்ப‌ நன்றி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Subi

கவிதை கவிதை சூப்பர் டா சுபி.

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்