home made curry leaves oil

கறிவேப்பிலை எண்ணை செய்யும் போது கொஞ்சம் தண்ணீராக இருக்கிறது அப்படித்தான் இருக்குமா. சுமாராக எவ்வளவு நேரம் காய்ச்ச வேண்டும். செய்முறை pls

//கொஞ்சம் தண்ணீராக இருக்கிறது// எண்ணெய் செறிவு குறைந்தாற்போல் தெரிகிறதா? இது பிரச்சினை இல்லை.

எண்ணெயும் நீரும் கலந்து விட்டது போல மிதக்கக் கூடாது. அப்படியிருந்தால் காய்ச்சியது போதாது. இது செய்முறையைப் பொறுத்தது. நீங்கள் கறிவேப்பிலையைப் போட்டுப் பொரித்து எடுத்தீர்களா? நீர்விட்டு அரைத்துக் கலந்தீர்களா? எப்படித் தயார் செய்தீர்கள்??

குறிப்பு இங்கு எங்கோ இருக்கவேண்டும். கிடைத்தால் கொடுக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

Thank you for your reply I grind the leaves in mixie

இலைகளை அறைத்துக் காய்ச்சுவதானால் எண்ணையையும் அறைத்த‌ இலை
விழுதையும் ஒன்றாகக் கலந்து பிறகு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.
எண்ணையை அடுப்பில் வைத்து சுமாரான் சூடு தானே என்று அதில் இலை
விழுதை சேர்த்துக் காய்ச்சக்கூடாது. அப்படிச் செய்தால் சட்டியில் உள்ள‌ அத்தனையும் வெளியே வாரி அடித்து விடும்.மிக‌ மிக‌ ஆபத்தான‌ செயல்.
எண்ணையும் விழுதும் சேர்த்து எவ்வளவு உள்ளதோ அதைப்போல‌ குறைந்தது
நான்கு பங்கு கொள்ளும் படியான பாத்திரத்தில் வைத்துக் காய்ச்சவும். அடி பிடிக்காமல் கிண்டிக்கொண்டே இருக்கவும். நன்கு சொரசொரப்பு அடங்கியதும்
தீயைக்குறைத்து விட்டு விளக்குத்திரியை எடுத்து காயும் எண்ணையை ஒரு சின்னக் கரண்டியில் எடுத்து அந்த‌ எண்ணையில் நனைத்து எரித்துப் பார்க்கவும்
விளக்குத்திரி ஏற்றுவது போல‌. சொட‌ சொட‌ என்று இல்லாமல் நின்று எரிந்தால்
அது தான் எண்ணை காய்ந்தது சரியான பதம். உடனே இறக்கி விடவும்.
பின்னர் வேண்டுமானால் பச்சைக்கற்பூரம் இரண்டு சிட்டிகை அளவு எண்ணையில் போட்டுக்கொள்ளவும், வாசனையாகவும் இருக்கும், பேனும் வராது. வேறு எந்த‌ எஸன்சும் போடாதீர்கள்.

தலையில் பொடுகு, அரிப்பு, உதிர்தல் என்கிற‌ மாதிரியான‌ தொல்லைகளுக்கு மருத்துவம் செய்யும் போது தலையை முதலிலேயே எண்ணை பிசுக்கு இல்லாமல் குளித்த‌ பின் செய்வது நல்லது. சளி, சைனஸ்
தொல்லை உள்ளவர்கள் எந்த‌ மருந்தையும் நன்றாக சூடுபடுத்திய‌ பின்பே
முதல் முறையில் தலையில் வேர்க்காலில் மட்டும் படும்படி தேய்த்து நொச்சி
இலை அல்லது வேப்பிலை கிடைத்தால் குளிக்கும் வென்னீரில் போட்டு
கொதித்த‌ பின் அதைப் பயன்படுத்தவும். இந்த‌ மாதிரியான மருத்துவ‌ முறைக்குப்
பின் ஷாம்பு பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்த‌ அடுத்த‌ முறைகளில் மருந்துகளின் அளவைக் கூட்டிக் கொள்ளலாம்.
சின்ன‌ வெங்காயம் புழுவெட்டின் காரணமாக‌ உண்டாகும் சொட்டைக்கு
மிக‌ நல்ல‌ மருந்து.
எந்த‌ வைத்தியமும் இரண்டு மூன்று முறைகளிலேயே பலன் தராது.
குறைந்தது ஆறு ஏழு முறைகளாவது செய்யவேண்டும்.
சைனஸ் தொல்லை உள்ளவர்கள் பப்பாளியை காயாக‌ பழமாக‌ சாப்பிட‌
சளி சைனஸ்,ஆஸ்த்துமா இவை குறையும். நாளடைவில் இல்லாமலேயே
போகும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்