தாமரைச்செல்வி கவிதைகள் - 4

காதலிக்க நேரமில்லை

காதலனே நாம் காதலித்தோம்
தூரம் இருந்தாலும் மனதால் சேர்ந்திருந்தோம்
அலைபேசி அழும் வரை
பேசிக்கொண்டேயிருந்தோம்
நேரம் மறந்து இமைக்காமல்
பார்த்துக் கொண்டேயிருந்தோம்
நிமிடமும் நினைவிலேயே வாழ்ந்திருந்தோம்

காதலனே நமக்கு மணமாகி விட்டது
இருமனம் ஒருமனமாகி விட்டது

ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள
மல்லிகைப் பூவை நீ சூடி விட
கை கோர்த்து வெளியே செல்ல
கோவிலிலே நீ குங்குமம் வைக்க
தடை சொல்வார் யாருமில்லை

இருந்தாலும் ஏதோ தடையுள்ளதே?

இருவரும் காரணமே தெரியாமல் சிரித்துப் பேச
அப்புறம் என்று அலைபேசியில் கேட்க
உனக்காய் நெடுநேரம் காத்திருக்க
ஒரு நிமிடம் நின்று ஒற்றை ரோஜா வாங்கி வர
நேரமில்லாமல் போனது ஏனோ?

என்னானது நமக்கு?
அருகிலேயே இருந்தாலும்
தடையில்லையென்றாலும்
சின்ன சின்ன ஊடலின்றி
வாழ்க்கை நோக்கிய பயணத்தில்
காதல் கொள்ள நேரமின்றிப் போனதே
இருமனம் இணையும் திருமணத்தில்
ஒருவேளை நம் காதலையே
தட்சிணையாகக் கொடுத்து விட்டோமோ
ஒன்றும் புரியவில்லை நமக்கு ஆனால்
இப்போது காதலிக்க நேரமில்லை

- தாமரைச்செல்வி

மரியான்

காத்திருந்தேன் என் கண்ணணுக்கு
காலடித்தடம் பார்த்து காத்திருந்தேன்
வருவேன் எனச் சொல்லிச் சென்றாயே
வரும் நாள் என்ன சொல்லிச் சென்றாயோ
நாட்களோ, வாரமோ அறியாமல்
நிமிடம் ஒவ்வொன்றும் காத்திருந்தேன்
வீசுகின்ற காற்றில் உன் வாசம் வருமென்று
வாசலில் வெட்கத்தோடு காத்திருந்தேன்

நிதமும் செய்தி படிக்கும் போதும்
நெஞ்சில் பயம் கொண்டு படிக்கிறேன்
வெளிநாடு வாழ் இந்தியர்களைப் பற்றி
கவலைக்கிடமாய் சொல்லக் கூடாதென
கடவுளை வேண்டிக் கொண்டே படிக்கிறேன்

உன் அலைபேசி எண்ணைக் கொடுக்கவில்லை
நீ போன இடமும் தெரியவில்லை
எந்த நம்பிக்கையில் சொல்லிச் சென்றாய்
நான் வருவேன் எனக்காய் காத்திரு என்று

என்னைக் கல்யாணச் சந்தையில்
விற்று விட்டால் என் செய்வேன்
என் கரம் பற்றி விட்டுச் சென்றிருந்தால்
யாருக்கும் நான் அடிமையில்லை
உன் மனையாள் என்ற பெயர்
என்னைக் காப்பாற்றும்

தொலைப்பேசி அழைப்பு வரும்போதெல்லாம்
உன் அழைப்பாய் இருக்க ஆவல் கொண்டேன்
ஏமாந்து போனேன் நான் உன் குரல் கேளாமல்
பரிமாறிக் கொள்ள வசதிகள் இருந்தும்
பறந்து செல்ல ஊர்திகள் இருந்தும்
பயன்படாமல் போனதே

வார்த்தையைக் காப்பாற்றுவாய்
விரைந்து வருவாய்
மழையை எதிர்பார்க்கும்
வாடிய பயிராய் உன்னவள்

- தாமரைச்செல்வி

Comments

2 கவிதைகளுமே ரொம்ப‌ நல்லா இருக்கு,
ரொம்ப‌ அனுபவிச்சு எழுதி இருக்கீங்க‌ அருமை...

//இருமனம் இணையும் திருமணத்தில்
ஒருவேளை நம் காதலையே
தட்சிணையாகக் கொடுத்து விட்டோமோ/// நல்ல‌ கேள்வி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…

அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

எனது கவிதைகளை பதிவிட்ட அட்மினுக்கு நன்றி.

நன்றி சுபி. தோழிகளான உங்களின் பாராட்டுக்கள் தான் என்னை எழுத வைக்கிறது. நன்றி

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

அப்படியா மாறிப்போனோம்??

காதலித்தல் காதலனுக்கு பெருமை
கடமையே கணவனுக்கு பெருமை - என்கிறார் என்னவர்

தோழி, கவிதை மொத்தமும் அழகு, மகிழ்ச்சியாய், ஏக்கமாய், சோகமாய் அருமை.

அறிந்து கொள்ள ஆசை, எப்படி?? மரியானின் காதலி மனதுக்கு வார்த்தை கொடுக்க தோன்றியது.

உன்னை போல் பிறரை நேசி.

ஒவ்வொரு வார்த்தையும், வரியும் அழகா ரசிச்சு எழுதுயிருக்கீங்க‌!!! உங்களோட‌ 2 கவிதைகளும் பிரமாதமா இருக்கு! வாழ்த்துக்கள்.

ரொம்ப அருமையா ரசிச்சு எழுதியிருக்கிங்க.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

Azagana kavithai. Manathai varudukirathu..:)

Be simple be sample

இரண்டு கவிதைகளும் ரொம்ப அருமைங்..
வாழ்த்துக்கள் ங்க .

நட்புடன்
குணா

இரு கவிதைகளும் சூப்பர்ங்க :))

காதலிக்க நேரமில்லை - ஒரு படத்தில் வரும் டயலாக் நினைவிற்க்கு வருகிறது
காதலிக்கும் போது பெத்தவங்களை மறந்துடுறீங்க
"கல்யாணத்திற்க்குப் பின் காதலை மறக்காதீங்க"

எங்க வீட்ல வருடங்கள் ஓட ஓடத்தான் காதல் அதிகமாகிக்கொண்டிருக்கு :))

நன்றி கிறிஸ்,
//காதலித்தல் காதலனுக்கு பெருமை
கடமையே கணவனுக்கு பெருமை - என்கிறார் என்னவர்//
உங்களவர் சொன்னது உண்மையே. ஆனால்
கடமை மட்டுமே இருந்தால் வாழ்க்கை ருசிக்காது.
ஊடலும் காதலும் இருந்தால் வாழ்க்கை வெறுக்காது.
//எப்படி?? மரியானின் காதலி மனதுக்கு வார்த்தை கொடுக்க தோன்றியது.//
மரியானாய் என்னவரும், காதலியாய் நானும் இருந்தால், என் நிலை என்ன என்ற மன ஓட்டமே இந்த கவிதை

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

நன்றி அனு
நன்றி kesheel
நன்றி ரேவதி
குணாங் ரொம்ப நன்றி

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

நன்றி வாணி,
//காதலிக்கும் போது பெத்தவங்களை மறந்துடுறீங்க
"கல்யாணத்திற்க்குப் பின் காதலை மறக்காதீங்க"//
அருமையான வரிகள்.
//எங்க வீட்ல வருடங்கள் ஓட ஓடத்தான் காதல் அதிகமாகிக்கொண்டிருக்கு :))//
சேம் பிஞ்ச்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

ரொம்ப சூப்பர்க்கா.இந்த ஜூனியருக்கும் இப்படி எழுத ட்ரெய்னிங் தருவீங்களா?