தக்காளி குருமா

தேதி: February 5, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளி - 100 கிராம்
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 (பெரியது)
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கருவா - சிறியதுண்டு
மசாலா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

முதலில் தக்காளியை சாறு எடுத்துக்கொள்ளவும்.

தேங்காய் துருவலையும், கசகசாவையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியைவைத்து எண்ணெய் ஊற்றி கருவா போட்டு வதக்கி பின் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.பின் தக்காளி சாறு, மசாலாதூள், அரைத்த தேங்காய் ,கசகசா விழுது, உப்பு போட்டு நன்கு நன்கு கிளறி மிதமான தீயில்வைத்து கொதித்ததும் சிறிது நேரம் கழித்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

கதீஜா, நீங்கள் நலமா?

இன்று தக்காளி குருமா செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

நான் நலம். நீங்க நலமா. தக்காளி குருமா செய்து பின்னூட்டம் தந்ததுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.