மணத்தக்காளி கீரை தண்ணிச்சாறு

தேதி: March 24, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

மணத்தக்காளி கீரை - அரை கட்டு
அரிசி கழுவிய நீர் - ஒரு கப்
தேங்காய் துருவல் - அரை கப்
சின்ன வெங்காயம் - 10
சீரகம் - முக்கால் தேக்கரண்டி
உப்பு
சர்க்கரை - ஒரு சிட்டிகை
மிளகு - சிறிது (தேவையானால்)


 

மணத்தக்காளி கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். மூன்று முறை நீரில் நன்றாக அலசி எடுத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். சீரகத்தை ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும்.
பாத்திரத்தில் கீரையோடு அரிசி கழுவிய நீரை ஊற்றி சர்க்கரை, நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் சீரகத்தை சேர்த்து வேக விடவும்.
தேங்காய் துருவலோடு தேவையான நீர் விட்டு அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுக்கவும்.
கீரை முக்கால் பதம் வெந்ததும் உப்பு சேர்த்து வேக விடவும். முழுவதும் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து லேசாக சூடானதும் எடுத்து விடவும். தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட கூடாது.
விரும்பினால் பொடித்த மிளகு தூவி சாதத்துடன் ரசம் போலவோ அல்லது சூப் போலவோ பரிமாறலாம். மிளகு தூவாமலும் சாப்பிட சுவையாக இருக்கும்.

வயிற்று புண், வாய் புண் ஆறவும் அஜீரணத்தை சரி செய்யவும் ஏற்ற உணவு. இந்த கீரை வேக நேரமெடுக்கும். விரும்பினால் குக்கரில் ஒரு விசில் வைத்து எடுக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Healthy and simple super.

Be simple be sample

நாங்க‌ இன்னும் கொஞ்சம் வித்யாசமா செய்வோம். இப்டியும் செய்து பார்க்கிறேன்.

எல்லாம் சில‌ காலம்.....

மணத்தக்காளி வைத்து புதுமையான‌ ரெசிபி.. படங்களும் சூப்பர்..

"எல்லாம் நன்மைக்கே"