விருதுநகர் பரோட்டா

தேதி: February 5, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 1 கிலோ
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய்- 10 மேசைக்கரண்டி


 

முதலில் மைதாவில் தேவையான அளவு உப்பு போட்டு, 5 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி
பிசைந்து தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும்.
இதை 4 மணி நேரம் ஊறவிடவும்.
பின் உருண்டைகளாக செய்து எல்லா உருண்டைகள் மீதும் 3 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் தடவி ,ஒரு வெள்ளைத்துணியை தண்ணீரில் நனைத்து அதன் மீது போட்டு மூடிவைக்கவும்.
பின் கால் மணி நேரம் கழித்து அகலமான பரோட்டா பலகையில் சிறிது எண்ணெய் தடவி ஒரு உருண்டையை எடுத்து வளர்த்து இருபக்கமும் பிடித்துக்கொண்டு விசிறி போல மடித்துக்கொண்டு வட்டமாக செய்துக்கொள்ளவும். இவ்வாறு எல்லா உருண்டைகளையும் செய்துவைத்து அதன்மேல் திரும்பவும் ஈரத்துணியை போட்டுவைக்கவும்.
பின் கால்மணி நேரம் கழித்து அடுப்பில் தவாவைவைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி ஒவ்வொரு உருண்டைகளையும் கைவிரல்களால் தட்டி எண்ணெய்யில் போட்டு இருபக்கமும் சிவக்க பொறித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்