பச்சை பயிறு உருண்டை

தேதி: March 25, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பச்சை பயிறு - 150 கிராம்
வெல்லம் - 50
ஏலக்காய் - ஒன்று
தேங்காய் - கால் மூடி
உப்பு - ஒரு சிட்டிகை


 

பச்சை பயிறை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். (எந்த‌ பயிறும் ஊற‌ வைக்காமல் நன்கு வேக‌ வைக்க‌ குக்கரில் ஹையில் 2 விசில் பின்னர் சிம்மில் 2 விசில் விட்டு நிறுத்தி ஆவி அடங்கியதும் திறந்தால் நன்கு வெந்து இருக்கும்.). தேங்காயை துருவி வைக்கவும்.
வெந்த‌ பயிறை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக‌ அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த பயிறுடன் ஏலக்காய் தூள், வெல்லம், துருவிய‌ தேங்காய் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
உருண்டையை தேங்காயில் பிரட்டி அல்லது உருண்டை மேல் தேங்காய் தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை அழகாக வெளியிட்டமைக்கு மனமார்ந்த‌ நன்றிகள் அட்மின்.

எல்லாம் சில‌ காலம்.....

Healthy recipe :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி அக்கா

எல்லாம் சில‌ காலம்.....

சுண்டலுக்கு பதிலா இதை போல‌ செய்யலாமே.. நல்ல‌ ஐடியா குடுத்திருக்கீங்க‌.. நன்றி

"எல்லாம் நன்மைக்கே"

நன்றி பாக்யா

எல்லாம் சில‌ காலம்.....

நல்ல ஐடியா தோழீ நான் நாளை ட்ரை பண்ணிட்டு சொல்றேன் மா.

ஏமாறாதே|ஏமாற்றாதே

சூப்பர்,
அப்படியே குக்கருக்கு வைக்க‌ வேண்டிய‌ நீரின் அளவும் சொன்னால் நல்லா இருக்கும்:)
நீரின் அளவு கூடினால் குழைந்து விடுகின்றது பாலா.

நன்றி அன்பு தோழி ப்ரியா

எல்லாம் சில‌ காலம்.....

பருப்புக்கு மேலே கொஞ்சம் அதிக‌ தண்ணீர் இருக்குமாறு வைக்கலாம். குழைந்தால் ப்ரச்னை இல்லை நிகி. எப்டியும் அரைக்க‌ போரிங்க‌ தானா?

எல்லாம் சில‌ காலம்.....