வாழைப்பூ வடை

தேதி: February 5, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைப்பூ - 1
தேங்காய்- 1 மூடி (துருவிக்கொள்ளவும்)
சோம்பு - 1/4 தேக்கரண்டி
இஞ்சி - 1/2 அங்குலம் துண்டு
பொரிகடலை - 100 கிராம்
வத்தல் - 8
மஞ்சள்தூள் - சிறிது
சின்ன வெங்காயம் - 10
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு

.


 

முதலில் வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்து தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.

வெந்ததும் தண்ணீரை நன்கு வடித்துக்கொள்ளவும்.

வேகவைத்த வாழைப்பூ உடன், தேங்காய் துருவல்,சோம்பு,இஞ்சி,பொரிகடலை,வத்தல் இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

இத்துடன் மஞ்சள்தூள்,உப்பு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை, கொத்தமல்லி இலை கலந்து நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.

எண்ணெயை சூடாக்கி வடைதட்டுவது போல தட்டி பொறித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள கதீஜா,
இன்று இந்த வாழைப்பூ வடை செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது!எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது!மிக்க நன்றி!

அன்புள்ள கதிஜா நலமா இருக்கீங்களா?
முதல் முறையாக வாழைப்பூ வடை செய்தேன்.நல்லாவே சொதப்பிட்டேன்.பிரட் தூள் போட்டு பிசைந்து ஒரு வழியா வடையாக்கிட்டேன்.இது ஒரு டேஸ்ட்டாக இருந்தது

எனது சந்தேகங்கள்..வாழைப்பூவை வேக வைக்க நீர் ஊற்ற வேண்டுமா?

பொரிகடலை என்றால் அரிசி பொரி தானே அல்லது
பொட்டுகடலையா?(என்னிடம் பொரி இல்லை அதனால் பொட்டுகடலையை மாவாக்கி சேர்த்தேன்)

இது சிறிது பக்குவம் சரியிலை என்றாலே வடை உடைந்து விடுமா.கொஞ்சம் விளக்கம் தாருங்களேன்.

நான் வாழைபூ வடை செய்ததும் இல்லை நான் சாபிட்டதும் கிடையாது.வாழைப்பூ வடை ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும் என்று கேள்விபட்டிருக்கேன்.

அன்புடன் பர்வீன்.

நான் நலம். நீங்க நலமா.நீங்க கேட்டதுக்கு பதில் சொல்ல தாமதம் ஆனதுக்கு மன்னிக்கவும் நான் இப்பதான் இதை பார்த்தேன்.

வேகவைக்க தண்ணீர் சேர்க்கனும்.

பொரிகடலை என்றால் பொட்டுகடலை.பொரி இல்லை

நான் சொன்னது போல அரைக்க வேண்டியவற்றை அரைத்து அதன் பிறகு மற்ற வடைகள் போல செய்யவும்.

தண்ணீர் நல்ல வற்றின பின்னாடி வாழைப்பூவை சேர்த்து அரைக்கவும். தண்ணீர் இருந்தாலும் வடை உடைந்துவிடும். நல்ல கெட்டியா இருக்குற மாதிரி கலவையை வைத்து வடை தட்டி பொரித்து எடுங்கள். தீயை மிதமானதாக வைக்கவும்.விளக்கம் போதுமா. அடுத்த முறை ட்ரை செய்து பாருங்க நல்லா வரும்.

அன்புடன் கதீஜா

வாழைப்பூ வடை செய்து நல்லா வந்ததா நன்றி. உங்கள் வீட்டிலும் எல்லாருக்கும் பிடித்து இருந்தது சந்தோஷம்.

அன்புடன் கதீஜா.