தேதி: March 30, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. தளிகா அவர்களின் கிட்ஸ் பாஸ்தா குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய தளிகா அவர்களுக்கு நன்றிகள்.
பாஸ்தா - ஒரு கப்
மஷ்ரூம், பட்டாணி - கால் கப்
தக்காளி - ஒன்று
பூண்டு - 2
ஆலிவ் எண்ணெய் / பட்டர் - 1 1/2 தேக்கரண்டி
ட்ரைட் பார்ஸ்லி, ரோஸ்மேரி, தைம், ஒரெகனொ - தலா கால் தேக்கரண்டி
சோயா சாஸ் - அரை தேக்கரண்டி
டொமேட்டொ சாஸ் - அரை தேக்கரண்டி
சில்லி சாஸ் - அரை தேக்கரண்டி
மிளகு பொடி - கால் தேக்கரண்டி
சீஸ் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் பாஸ்தா சேர்த்து 8 முதல் 10 நிமிடம் வேக வைக்கவும். (பாஸ்தா வகையை பொருத்து வேகும் நேரம் மாறலாம்) வெந்ததும் தண்ணீரை முற்றிலும் வடிக்கட்டி வைக்கவும். மேலே அரை ஸ்பூன் எண்ணெய் தெளித்து ஆற விடவும்.

மற்றொரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் அல்லது பட்டர் ஊற்றி சூடானதும் மிகவும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், மஷ்ரூம், பட்டாணி, தக்காளி சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும்.

வதக்கியவற்றுடன் ட்ரைட் பார்ஸ்லி, ரோஸ்மேரி, தைம், ஒரெகனொ, மிளகுத் தூள், உப்பு டொமடொ சாஸ் சேர்த்து கிளறவும்.

கடைசியாக வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.

சுவையான சுலபமாக செய்யக்கூடிய கிட்ஸ் பாஸ்தா ரெடி. பரிமாறும் பொழுது மேலே சீஸ் துருவல் சேர்த்து பரிமாறவும்.

Comments
kavitha
Vazthukkal Kavitha,:) supera iruku
Be simple be sample