வேர்க்கடலை புட்டு

தேதி: April 1, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி ஜெயகீதா அவர்களின் வேர்க்கடலை புட்டு என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜெயகீதா அவர்களுக்கு நன்றிகள்.

 

வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்
புட்டு மாவு - ஒரு கப்
சர்க்கரை (அ) வெல்லம் - ஒரு கப்
துருவிய தேங்காய் - கால் கப்
ஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 10


 

அரை டம்ளர் தண்ணீருடன் உப்பு சேர்த்து கலக்கி புட்டு மாவில் தெளித்து கிளறவும்.
இந்த‌ புட்டு மாவை இட்லி பானையில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
மாவு வெந்ததும் கட்டி இல்லாமல் உதிர்த்து விட்டு அதில் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை (அ) வெல்லம், போட்டு கிளறி விடவும்.
வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து புட்டுடன் சேர்த்து கிளறவும்.
பின்னர் நெய்யில் வறுத்த முந்திரியை போட்டு நன்றாக கிளறி பரிமாறவும். சுவையான‌ வேர்கடலை புட்டு தயார்.

சாதாரண‌ புட்டு போல‌ இருந்தாலும் வேர்கடலை போட்டு செய்வது வித்யாசமாக‌ இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்க‌ ரொம்ப‌ நல்லா இருக்கு பாலா. நிச்சயம் ட்ரை பண்றேன்.

அன்புடன்
பாரதி வெங்கட்

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அருசுவை டீமிற்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

சுவையும் ரொம்ப‌ நல்லா இருந்துச்சி. செய்து பாருங்க‌ பாரதி.

எல்லாம் சில‌ காலம்.....