பருப்பு புட்டு

தேதி: April 1, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி சித்ராதேவி அவர்களின் பருப்பு புட்டு என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சித்ரா தேவி அவர்களுக்கு நன்றிகள்.

 

கடலை பருப்பு - ஒரு கப்
உளுத்தம் பருப்பு - ஒரு கப்
பாசி பருப்பு - ஒரு கப்
கொண்டைக்கடலை - அரை கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - ஒரு கப்
வெல்லம் அல்லது சீனி - அரை கப்


 

கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசி பருப்பு இவற்றை ஒன்றாக போட்டு 3 மணி நேரம் ஊற வைக்கவும். கொண்டைக்கடலையை தனியாக‌ ஊற‌ வைக்கவும்.
பின்பு நீரை நன்றாக வடித்து விட்டு மிக்ஸியில் தேவையான அளவு உப்புடன் நீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
இந்த‌ மாவை இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.
அவித்த இட்லியை சிறிது நேரம் ஆற‌ வைக்கவும்.
ஆறிய‌ இட்லியை நன்றாக‌ உதிர்த்து வைக்கவும்.
இதனுடன் சிறிது நெய், தேங்காய்ப்பூ, வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து பிசறவும்.
சுவையான ஆரோக்கியமான புட்டு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

I like this recipe, will try for sure. Colourful pictures. Good :))

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அருசுவை டீமிற்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

தேங்க்ஸ் வாணி. இந்த‌ ரெசிபி ரொம்ப‌ நல்லாவே இருந்துச்சி. கண்டிப்பா செய்து பாருங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....