கருணைக்கிழங்கு கீரை பஜ்ஜி

தேதி: April 3, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மகாலெட்சுமி ப்ரகதீஸ்வரன் அவர்களின் கருணைக்கிழங்கு கீரை பஜ்ஜி குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மகாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

கருணைக்கிழங்கு - அரைக் கிலோ
வெங்காயம் - ஒன்று
கார்ன் ஃப்ளார் - அரை கப்
கடலை மாவு - அரை கப்
அரிசிமாவு - அரை கப்
முளைக்கீரை அல்லது ஏதாவது ஒரு கீரை - ஒரு பிடி
பச்சைமிளகாய் - 2
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு


 

கருணைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம், கீரை, பச்சைமிளகாய் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பச்சைமிளகாய் போட்டு பொரிந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கி விட்டு கீரையும் போட்டு ஒரு வதக்கு வதக்கவும். (ஒரு நிமிடம் போதுமானது)
மசித்த கருணைக்கிழங்குடன் வதக்கியவற்றைப் போட்டு, கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு போட்டு பிசைந்துக் கொள்ளவும். அதை சிறு சிறு உருண்டைகளாக்கவும்.
கார்ன் ஃப்ளார், கடலை மாவு, அரிசி மாவு மூன்றையும் பஜ்ஜிமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருணைக்கிழங்கு உருண்டைகளை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.
சுவையான கருணைக்கிழங்கு கீரை பஜ்ஜி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Idhuvum pidichirukku :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா