நெய் குஜிலி

தேதி: April 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மெஹர் பானு அவர்களின் நெய் குஜிலி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மெஹர் பானு அவர்களுக்கு நன்றிகள்.

 

மைதாமாவு - 4 கப்
நெய் - 100 கிராம்
பால் பவுடர் - 3 மேசைக்கரண்டி
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 4 1/2 கப்
பால் - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

மைதா மாவை சலித்து பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் சமையல் சோடா, பால், சிறிது எண்ணெய், பால் பவுடர் ஆகியவற்றை கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
பிசைந்த மாவை பெரிய வட்டமாக தேய்த்து சிறிய வட்ட அச்சியை வைத்து சிறு அப்பளங்களாக நறுக்கவும். ஒவ்வொரு அப்பளத்தின் நடுவிலும் கத்தியால் மூன்று இடத்தில் கீறி விடவும்.
பின்னர் சூடான எண்ணெயில் போட்டு சிவக்கப் பொரித்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சர்க்கரையை போட்டு அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து கம்பி பதத்தில் வரும் போது இறக்கி விடவும்.
சர்க்கரை பாகில் பொரித்த அப்பளங்களை போட்டு மூழ்க விட்டு சிறிது நேரம் கழித்து எடுக்கவும்.
சுவையான நெய் குஜிலி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமான குறிப்பு . வாழ்த்துக்கள் கிச்சன் குயின்

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

Meedum kq paguthiku therthedutha admin Anna&arusuvai team thanku

Be simple be sample

Thanku sheela

Be simple be sample