பருப்பு சூப்

தேதி: April 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

துவரம் பருப்பு - 4 கப்
விரும்பிய காய்கறி - ஒரு கப்
ரொட்டி துண்டுகள் - சிறிதளவு
துருவிய பாலாடைக்கட்டி - 4 மேசைக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் ரொட்டித் துண்டுகளை சிறுத் துண்டுகளாக நறுக்கி போட்டு வறுத்துக் கொள்ளவும்.
குக்கரில் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்ததும் பருப்பு கலவை கெட்டியாக இருந்தால் தண்ணீர் ஊற்றி கடைந்துக் கொள்ளவும்.
அதில் விரும்பிய காய்கறிகளை போட்டு வேக வைக்கவும்.
பருப்புடன் சேர்ந்து காய்கறிகளும் நன்றாக வெந்தபின் துருவிய பாலாடைக் கட்டியைப் போடவும்.
அதன் பிறகு வறுத்த ரொட்டித் துண்டுகளையும் சேர்த்து இறக்கவும்.
பரிமாறும் போது தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Meedum kq paguthiku therthedutha admin Anna&arusuvai team thanku

Be simple be sample