உருளைக்கிழங்கு மசாலா

தேதி: April 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. தளிகா அவர்களின் உருளைக்கிழங்கு மசாலா குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய தளிகா அவர்களுக்கு நன்றிகள்.

 

உருளைக்கிழங்கு - ஒன்று
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
வரமிளகாய் - 2
வெங்காயம் - ஒன்று
சிறிய தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிதளவு


 

உருளைக்கிழங்கை சிறிய சதுரமாக நறுக்கி மூழ்குமளவு தண்ணீரும் சிறிது உப்பும் சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்து தண்ணீர் வடித்து எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் தாளிக்கவும். அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் மஞ்சள் தூளும் சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை போட்டு தேவைப்பட்டால் உப்பும் சேர்த்து கிளறி மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
கிழங்கு மசாலாவுடன் சேர்ந்து நன்கு வெந்ததும் மல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு மசாலா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Meedum kq paguthiku therthedutha admin Anna&arusuvai team thanku

Be simple be sample

I need always foo d mail