ஸ்பெஷல் பிட்ஸா

தேதி: February 7, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா மாவு - 150 கிராம்
ஈஸ்ட் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீனி - 1 தேக்கரண்டி
பட்டர் - 6 மேசைக்கரண்டி
தக்காளி சாஸ் - 1 1/2 தேக்கரண்டி
கோழிகறி - கால்கிலோ
குடமிளகாய் - 2
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 1
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
மிளகு தூள் - 3 தேக்கரண்டி
சீஸ் - தேவைக்கேற்ப
நெய்-சிறிது


 

முதலில் கால்கப் அளவிற்க்கு சுடுதண்ணீரை எடுத்து அதில் சீனி,ஈஸ்டை போட்டு 10 நிமிடம் வரை நுரைவர வைக்கவும்.

பாத்திரத்தில் மைதாவை போட்டு உப்பு,ஈஸ்ட் கலவையை சேர்த்து 3 மேசைக்கரண்டி பட்டர் போட்டு நன்கு பிசைந்து அதனை நனைந்த துணியால்மூடி 1 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

பின் கோழிகறியில் மிளகும்,உப்பும் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைத்து சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.

தக்காளி,குடமிளகாயை சிறு துண்டுகளாக்கவும்.

பெரிய வெங்கயத்தை மெல்லியதாக நறுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி குடமிளகாயை வதக்கி தனியே எடுத்துவைக்கவும்.

அதேபோல தக்காளியையும் தனியாக 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வதக்கி கொள்ளவும்.

பின் வெங்காயத்தையும் அதேபோல தனியாக 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி தனியாக வதக்கிகொள்ளவும்.

1 மணி நேரம் கழித்து மாவு 2 பங்கு அளவுக்கு பொங்கி வந்ததும் மீண்டும் குழைத்து பேக் செய்யக்கூடிய பத்திரத்தில் வைத்து நெய் தடவிய மாவு உருளையை பயன்படுத்தி அதன் மேல் பகுதியை சமன்படுத்தி முள்கரண்டியால் குத்தி 40 நிமிடம் அப்படியே வைத்துவிடவும்.

பின்பு பொங்கிய மாவை ஃப்ரீ ஹீட் செய்த ஓவனில் வைத்து 180c யில்வைத்து 20 நிமிடம் இளம் பிரவுன் நிறம் வரும்வரை பேக் செய்யவும்.

பின் அதை வெளியில் எடுத்து சூட்டோடு அதன் மேல் பகுதியில் 3 மேசைக்கரண்டி பட்டர் தடவி,பின் அதன் மேல் தக்காளி சாஸ் தடவி கோழித்துண்டுகளை சிதறவும்.பின் வதக்கிய தக்காளி,குடமிளகாய்,வெங்காயத்தை தூவி அதற்க்கு மேல் சீஸை துருவிபோட்டு 20 நிமிடம் திரும்பவும் பேக் செய்யவும்.

ஸ்பெஷல் பிஜ்ஜா தயார்


மேலும் சில குறிப்புகள்