வெஜ் ஸ்டூ

தேதி: April 10, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

காரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - சிறிது
பூண்டு - 5 பல்
தேங்காய்ப் பால் - ஒரு கப்
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று


 

காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். தேங்காயை அரைத்து பால் எடுத்து வைக்கவும். கார்ன் ப்ளாருடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
காய்களை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
அதனுடன் வேக வைத்த காய்களை சேர்க்கவும்.
அனைத்தும் சேர்ந்து கொதித்ததும் தேங்காய்ப் பால், கரைத்த கார்ன் ஃப்ளார் மாவை ஊற்றி கொதிக்க விடவும்.
லேசாக கொதி வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
வெஜ் ஸ்டூ தயார். ஆப்பத்திற்கு ஏற்ற சைட் டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மிகவும் எளிமையான சத்தான‌ குறிப்பு :)

"எல்லாம் நன்மைக்கே"

சூப்பர்
டேஸ்டி
தேவையான‌ பொருளில் பச்சை மிளகாயை விட்டுப் புட்டீங்களே ;(

ஸ்டூ சூப்பரா இருக்கு. அருமையான‌ செய்முறை மற்றும் படங்கள் ரேவ்'ஸ்

எல்லாம் சில‌ காலம்.....

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா & அறுசுவை குழுவினருக்கு நன்றி

Be simple be sample

Thanku packia.

Acho Niki kavanikalapa. Kavanichu sonnathuku thanku.

Bala thanku pa

Be simple be sample