பேஸிக் சிக்கன் ரோஸ்ட்

தேதி: April 11, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முழுக் கோழி - ஒன்று
உருளைக்கிழங்கு - 4
ஃப்ரோக்கலி - ஒன்று
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
அரைக்க :
மல்லித் தழை - கால் கப்
பச்சை மிளகாய் - 2
மிளகு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

உருளையை தோல் சீவி நான்காக நறுக்கி வைக்கவும். ஃப்ரோக்கலியை கழுவி பெரிய பூக்களாக வெட்டி வைக்கவும். கோழியை சுத்தம் செய்து தோலுடன் வைக்கவும்.
அரைக்க கொடுத்தவற்றை பேஸ்ட் போன்று தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை கோழி முழுவதும் உள் பக்கமும், வெளிபக்கமும் தடவி 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
பின்னர் பேக்கிங் டிரேயில் பாயில் பேப்பரை விரித்து ஆலிவ் ஆயில் ஸ்பிரே செய்து அல்லது தடவி உருளைக்கிழங்கை ஆலிவ் ஆயிலில் பிரட்டி அடுக்கி வைக்கவும். ட்ரேவில் கம்பியை வைத்து அதில் கோழியை வைக்கவும்.
பேக்கிங் ட்ரேவை முற்சூடு செய்த அவனில் 180 C ல் முக்கால் மணி நேரம் ரோஸ்ட் செய்யவும்.
அதன் பின்னர் டிரேவை வெளியே எடுத்து அதனுடன் ஃப்ரோக்கலியை அடுக்கி மேலும் முக்கால் மணி நேரம் ரோஸ்ட் செய்து வெந்ததை சரி பார்த்து வெளியில் எடுக்கவும்.
சுவையான முழுக் கோழி ரோஸ்ட் ரெடி. சூடாக பரிமாறவும்.

மேரினேட் செய்ய பயன்படுத்தும் மசாலா அவரவர் விருப்பத்திற்கும், சுவைக்கும் ஏற்றாற் போல பொருட்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

கோழி தனியே, காய்கறிகள் தனியே வைத்தும் ரோஸ்ட் செய்யலாம். பெரிய டிரே இருப்பின் மொத்தமாக எல்லாவற்றையும் சேர்த்தும் செய்யலாம். விரும்பிய வேறு காய்களும் சேர்க்கலாம்.

கோழியை தோலுடன் உண்ண விரும்பாதவர்கள் பரிமாறுகையில் தோலை நீக்கி விட்டு பரிமாறவும்.

இது ஆங்கிலேயர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. அவர்கள் மிளகுத்தூள், உப்பு, ஆலிவ் ஆயில் மற்றும் வேறு சில ஹெர்ப் வகைகள் சேர்த்து செய்வதுண்டு. கிரேவி என்றழைக்கப்படும் சாஸ் போன்ற ஒன்றை இத்துடன் ஊற்றி உண்பார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எப்டி இவ்ளோ அருமையா மெனக்கெட்டு எல்லாம் செய்றீங்க‌? இதுலாம் நாங்க‌ செய்யவே மாட்டோம். கடைல‌ கிடைக்குது. வீட்ல‌ ஏன் மெனக்கெடனும்னு விட்டுடுவோம். அருமை வாணி. சான்சே இல்ல‌.

எல்லாம் சில‌ காலம்.....

ஆக்சுவலா இது ரொம்ப ஈசிங்க. வாரத்தில் ஒரு நாள் செய்துடுவேன். மேரினேட் செய்தவற்றை அப்படியே அவரில் தள்ளி விட்டு நம்ம வேற வேலையைப் பார்க்கலாம். அடுப்பு அருகிலே நிக்க வேண்டியதில்லை.
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்க்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி :))