கடலை மா குழம்பு

தேதி: April 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மா - ஒரு கப்
மிளகு சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 6
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
தாளிக்க :
கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, வெந்தயம் - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

கடலை மாவில் மிளகு சீரகத் தூள், உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும். சிறிதளவு எண்ணெய் சேர்த்தால் பிசையும் போது கையில் ஒட்டாது.
மாவை உருண்டைகளாக்கி தட்டி இடியாப்ப தட்டில் வைக்கவும்.
இடியாப்ப தட்டை இட்லி பானையில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
வேக வைத்த மாவை எடுத்து ஆறியதும் சிறுத் துண்டுகளாக வெட்டவும்.
வெட்டிய துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மிளகாய்த் தூள், தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்ததும் பொரித்து வைத்துள்ள கடலை மாவு துண்டுகளை சேர்க்கவும்.
குழம்புடன் துண்டுகள் சேர்ந்து எண்ணெய் பிரியும் வரை கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
சுவையான கடலை மா குழம்பு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Looking different.i think it gives good taste.nice receipe

நல்லா இருக்கு. ஆனா நாம் தான் கடலை மாவு கலவையை வேக‌ வைக்கிறோம் இல்ல‌. அப்றம் ஏன் எண்ணையில் பொரிக்கனும்?

எல்லாம் சில‌ காலம்.....

நல்லாருக்கு தர்ஷா.செய்து பார்க்கிறேன்

Be simple be sample

கிரேவியில் கறித்தூள் தேவையில்லையா தர்ஷா ? புதிய குறிப்பாயிருக்கே :)) சூப்பர்

புதுமையான ரெசிபி பார்க்கவே சூப்பரா இருக்கு தர்ஷா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.