மரவள்ளிக்கிழங்கு பாயசம்

தேதி: April 15, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

மரவள்ளிக்கிழங்கு - அரை கிலோ
உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - ஒன்று
தேங்காய் - கால் மூடி


 

மரவள்ளிக் கிழங்கை துருவி வைத்துக் கொள்ளவும்.
துருவிய‌ கிழங்குடன் 3 டம்ளர் அல்லது கிழங்கு மூழ்கும் அளவிற்கும் சற்று அதிகமாக‌ தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேக‌ விடவும்.
கிழங்கு பாதி வெந்ததும் ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
கிழங்கு முழுவதும் வெந்ததும் வெள்ளை நிறம் மாறி கண்ணாடி போல் மாறி விடும். அப்போது தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
மரவள்ளிக்கிழங்கு பாயாசம் தயார். சுவை அருமையாக‌ இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

சூப்பரா இருக்கு பாயசம் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தேங்க்ஸ் ஸ்வர்ணா. செய்து பாருங்க‌ டேஸ்டும் ரொம்ப‌ நல்லா இருக்கும்.

எல்லாம் சில‌ காலம்.....

பாயசம் அருமை,நான் தேங்காய் பால் சேர்த்து செய்வேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி musi. நான் தேங்காய் பாலுக்கு பதில் தான் தேங்காய் துருவி சேர்த்துள்ளேன். இதும் நல்லா இருக்கும் musi.

எல்லாம் சில‌ காலம்.....