பொட்டு வைத்த முகமோ

பொதுவாக பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டை அவரவர்களுக்கு பிடித்தமாதிரி வடிவத்திலும், நிறத்திலும் அணிகின்றார்கள். ஆனால் அவர்கள் முக அமைப்பிற்க்கு அதாவது நெற்றியின் அமைப்பிற்க்கு ஏற்றமாதிரி வைத்தால் இன்னும் வடிவாக இருப்பார்கள்.உதாரணமாக:
உயரம் குறைந்தவர்களும், குறுகலான நெற்றியுள்ளவர்களும், நீள்வட்டமான வடிவம் மற்றும் செங்குத்தான வடிவங்களில், பொட்டை அணிந்தால் மிகவும் எடுப்பாக இருக்கும்.
உயரமாகவுள்ளவர்களும், அகன்ற நெற்றியுள்ளவர்களும், வட்ட வடிவத்தில் நெற்றியின் நடுவில் வைத்தால் அழகாக இருக்கும்.
அதைப் போல் சுமாரான உயரமுள்ளவர்களும், இரண்டுக்கும் இடைப்பட்ட நெற்றியை கொண்டவர்கள், பிடித்த வடிவத்தில் இரு புருவங்களுக்கும் இடையில் அணிந்தால் அழகாக இருக்கும்.
பொட்டுக்கள் நிறைய வண்ணங்களில் கிடைத்தாலும் வீட்டு விசேசங்களுக்கு, மற்றும் கல்யாணம், பூமுடித்தல், வளைகாப்பு,மஞ்சள் நீராட்டு, போன்ற சுப காரியங்களுக்கு போகும் பொழுது கட்டாயம் சிவப்பு வண்ணப் பொட்டைத் தான் அணிந்து செல்ல வேண்டும். அது தான் பெண்கள் பொட்டிற்க்கு தரும் மரியாதையாய் கருதப்படும்.
மற்றபடி பொதுவான விசேசங்களுக்கு போகும் பொழுது உடைக்கேற்ப்ப அல்லது பிடித்த வண்ணத்தில் அணிந்துக் கொள்ளலாம்.

மேலும் சில பதிவுகள்