ஃப்ரோக்கலி தோசை ( 6 மாத குழந்தைக்கு)

தேதி: April 18, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

தோசை மாவு - அரை கப்
ஃப்ரோக்கலி பூக்கள் - 5
நெய் - தேவைக்கு


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஃப்ரோக்கலி பூக்களை கொதி நீரில் போட்டு 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பின்னர் அதை மிக்ஸியில் உதிரியாக அரைத்து எடுக்கவும்.
அரைத்த ஃப்ரோக்கலி உதிரியை தோசை மாவுடன் சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை வைத்து சிறிய தோசைகளாக ஊற்றவும்.
மேலே நெய் ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சத்தான ஃப்ரோக்கலி தோசை தயார். கைகளால் பிய்த்து மசித்து கொடுக்கவும்.

இந்த தோசை சாதாரண தோசையை விடவும் வேக சிறிது நேரம் கூடுதல் எடுக்கும்.

இட்லி விரும்பும் குழந்தைகளுக்கு தோசைக்குப் பதிலாக இட்லியாக ஊற்றிக் கொடுக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆ சுட‌ சுட‌ சூப்பரான‌ ப்ரோக்கோலி தோசை. சூப்பரா இருக்கு. உங்களுக்கு எப்டி இப்டிலாம் தோணுது?

எல்லாம் சில‌ காலம்.....

சத்தான ரெசிபி :) எப்படிலாம் யோசிக்கிறீங்க க்ரேட்டுங்க நீங்க :) இப்படிலாம் செய்து கொடுத்தாதான் குட்டீஸ் சாப்பிடுறாங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தோழிகளே உங்கள் வருகைக்கும், பதிவிற்க்கும் மிக்க நன்றி :))