ஈஸி புளிசாதம்

தேதி: April 18, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மீதமான‌ சாதம்‍ - தேவைக்கேற்ப‌
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
காய்ந்த‌ மிளகாய் - 5 அல்லது 6
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
கடலை பருப்பு - 3 தேக்கரண்டி


 

புளியை ஊற‌ வைத்து கெட்டியாக‌ கரைத்து வைக்கவும். இரவில் மீந்த‌ சாதத்தை எடுத்துக் கொள்ளவும்.
சாதத்தில் புளி கரைசலை ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
சாதத்தை நன்கு கிளறி விட்டு இரவு முழுவதும் ஊற‌ விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, காய்ந்த‌ மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் கடலை பருப்பை சேர்த்து தீய‌ விடாமல் வறுக்கவும்.
அதனுடன் ஊற‌ வைத்த‌ சாதத்தை சேர்த்து கிளறவும்.
மிக எளிதில் செய்துவிடக்கூடிய புளி சாதம் தயார்.

காரத்திற்கு காய்ந்த‌ மிளகாய் மட்டும் தான். எனவே காரத்திற்கு ஏற்ப‌ சேர்த்துக் கொள்ளவும்.

இந்த சாதம் அடுத்த‌ நாள் வரை கெடாமல் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அறுசுவை டீம் மற்றும் அட்மினுக்கு நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....

சுலபமான குறிப்பு. அழகாகப் படம் எடுத்திருக்கிறீர்கள். அந்த நான்காவது படம், சட்டென்று பார்க்க ஸ்ட்ராபெரி பழம் போல தெரிந்தது. :-)

நன்றி புனிதா. புளி சாதத்துல‌ ஸ்ட்ராபெரி பழம். ஆ சூப்பர். இது கூட‌ நல்ல‌ ஐடியா. ஆனா நல்லா இருக்காது. வேணும்னா புளிசாதம் கூட‌ ஸ்ட்ராபெரி ஊறுகாய் ட்ரை பண்ணி பார்க்கிறேன். just kidding. once again thanks punitha.

எல்லாம் சில‌ காலம்.....

பாலா எங்க வீட்டுல இப்படிதான் செய்வோம்.நல்லாருக்கு

Be simple be sample

நன்றி ரேவ்'ஸ். எங்க‌ வீட்ல‌ சாதம் அதிகம் ஆகிடுச்சினா இப்டி செய்வோம்.

எல்லாம் சில‌ காலம்.....

Puli rice superra eruku

Enaku ethu puthusu balanayaki
Enka homela ethellam seiya matanka

Rice waste aana enee epti try panni parkuraen
Super idea

ML

thanks கல்யாணி.

எல்லாம் சில‌ காலம்.....

அட பரவாயில்லையே இப்படி கூட செய்யலாமா சூப்பர்ங்க ஈசி ரெசிபி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தேங்க்ஸ் ஸ்வர்ணா. இது ரொம்ப‌ நல்லா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

night satham veenapogamal eruka nalla tips thanks

நன்றி செல்வா. உங்க‌ பேர் பார்த்த‌ உடனே என் பள்ளி தோழி நினைவு வந்துவிட்டது. அவ‌ பேரும் செல்வராணி.

எல்லாம் சில‌ காலம்.....