மாமியார் ப்ரச்சனை கையாள்வது எப்படி உதவி தேவை

enakkum enga mamiyarala problem than idha problemnu solla mattene but eppadi handle panradhunu enakku theriyala.ennoda problem romba romba different. naanum love marriage than enakku marriage aagi 7 yrs aaga pogudhu.enga mamiyar veetula en husband than ellam paathukiraanga.so en husbandku ellarum koncham payapaduvaanga. adhuvum illama marriageku munaadiye en husband enna pathi ava romba strict andha madhirilam solli vachirukaanga. adhey madhiri enga veetula ullavungala nee than koncham change pannanumnu en husband sonaanga.enga mamiyar veetula yaarume porupa illa neraya waste panuvaanga sikkanama iruka mataanga including my mamiyar. so naan idhellam avungakitta sonene indha madhiri irukadhinga appadinu but avungalala change panna mudiyala because naan enga veetula valandha vidham appadi enga amma romba sikkanama irupaanga so adhaye naan en mamiyar kittayum expect panrene adhu thappunu therinchaalum avunga family nalladhuku thana solluromnu starting oru 2 yrs avungalukku neraya advice paninene (ella veetulayum mamiyar than advice panuvaanga Inga total opposite) so koncham change aananga.naan avunga nalladhukku than sollurenu therinchalum avungala adha accept panika mudiyala so naan edhu sonaalum avunga kurai solluradha ninaika start paninaanga adhula irundhu naan edhum directa solluradhu kidaiyadhu but enna pathi avungala thappaana impression vachikittu adhu madhiriye nadapanga.enga veeetukku vandha avungalukku pasicha kooda sapida mataanga avunga payan sapidumanu sonna than sapiduvaanga adhey madhiri than ella visayathukkum.avunga edho third person veetula iruka madhiri nadandhupaanga.adhey madhiri avungala endha velaiyum seyya mataanga naan edhavadhu velai seyya start panina udane kudu naan seyyurenu vandhu kepaanga naan kudukalena adhukkum kovichupaanga.avunga village naala avungalukku neraya visayangal theriyadhu so avungalukku theriyadha visayatha sonaalum avunga adha kadhu kuduthu appadiyama appadinu keka mataanga. ippa naan job poradhunaala en 2.5 yrs ponna pathuka vandhirukaanga papa visayathula edhavadhu sonna kooda avunga adha purinchuka matingiraanga. but naan avungalukku ellame nalla seyyurene weekendla nalla samayal pani tharene velila enga ponaalum kottitu povom but edhavadhu sapida vaangi kudutha adhu ennanu kooda keka mataanga adhey madhiri engaachum kootitu pona idhu enna idam edhume keka mataanga. key kudutha pommai madhiri irupaanga. avunga oru urimaiyoda irukanumnu naan expect panrenu but avunga iruka matingiraanga adhunaala sila time enakku romba erichala varudhu en husband marriageku appuram than romba poruppa mari irukaanga adhu enga mamiyarukey theriyum but accept panika mudiyala. adhey madhiri avunga samayal panina nalla iruka edhume keka mataanga avunga edhu samachaalum nalla than irukunu ninachukuvaanga but mosama irukum.aana yaarum adha kurai solla koodadhu adhayum accept panika mataanga. sila time salt neraya pottiruvaanga uppu neraya irukunu sonna correcta thanma potenu solluraanga en husbandku ivunga seyyura ellame thappunu theriyum but edhum solla mataanga adhunaala sila timela naan solla vendiyadha iruku so enga rendu perukkula problem varudhu naanga rendu perum thaniya irundha endha problemum illa but enga mamiyar vandha adikadi engalukulla sandai varudhu enakku eppadi handle panradhunu theriyala sila time naan porumaiya irundhaalum sila time avunga seyyuradhu enakku kovam varudhu please help me

உங்க மாமியார் அவங்க வீட்லயும் நீங்க உங்க வீட்லயும் இருக்கிறப்ப எந்த பிரச்சினையும் இல்லைல்ல! இப்போ உங்களுக்கு உங்க குழந்தையைப் பார்க்க ஆள் வேண்டி இருக்கு. வேற யாரையாச்சும் பிடிக்கலாமா என்று பாருங்க. அப்போதான் உங்கள் வாழ்க்கை நிம்மதியா போகும்.

அவங்களுக்கு அவங்க வீட்டுல இருக்கிறது போல சுதந்திரம் இன்னொரு வீட்ல வராதுதான், அது தன் பையன் வீடா இருந்தால் கூட. உங்க வீடு... இங்கே இருக்கிற விடயங்கள் எதையும் தான் குழப்புறது போல இருக்க வேண்டாம்னு தானாவே எதுவும் செய்யாம நீங்க ஆரம்பிச்சா போய் ஹெல்ப் பண்ணலாம்னு இருக்காங்களோ என்னவோ!

என் அம்மா என் வீட்டுக்கு வந்தால் தானாக எதுவும் செய்வதில்லை. நான் என் பையன் வீட்டுக்குப் போனால் இதே போலதான் இருக்கிறேன். இதில் தப்பாக எதுவும் எனக்குத் தெரியவில்லை. இத்தனைக்கும் என் அம்மாவுக்கு என் வீட்டில் பூரண சுதந்திரம் இருக்கிறது. என் மகனோ மருமகளோ என்னை எப்பவும் எதுவும் சொன்னது கிடையாது. ரொம்ப சந்தோஷமான குடும்பம் எங்களது. நானாவேதான் போறேன் வரேன். ஆனால் அவரவர் ஸ்பேஸ் என்கிறது இருக்குல்ல. அதை மதிக்கணும். அனுமதி இல்லாமல் குழப்பக் கூடாது. மனுஷரை விடுங்க. என் முயல் குட்டி கூட அதன் நல்லதுக்குன்னு நான் செய்றது எல்லாத்தையும் ஏத்துக்கறது இல்லை. கோபம் காட்டுது. தூக்கிப் போட்டு உடைக்குது, வீசி எறியுது. சாப்பிடாம அடம் பிடிக்குது. மனுஷர்... அப்படி இருந்தா எதிர்ப்புக் காட்டுறதாயும் பிடிக்குதோ பிடிக்கலயோ அமைதியா போற போக்குல போனா, இக்னோர் பண்றதாயும் அர்த்தமாகிருது. எல்லாம் நாம் எடுத்துக்குற விதத்திலதான் இருக்கு.

அவங்க உங்க தனிப்பட்ட சம்பாத்தியத்தை விரயமாக்காதவரைக்கும் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். எப்படி உங்களால் அவர்கள் போக்கிற்கு மாற முடியாதோ அதே போல அவர்களாலும், அதுவும் இத்தனை வயதிற்குப் பிறகு உங்க போக்குக்கு மாற இயலாது. ஏதாவது சொல்ல வேண்டியது இருந்தால் உங்கள் கணவரே சொல்லிக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுங்கள். அது உறவுக்குப் பாதுகாப்பு.

//en husband than ellam paathukiraanga.// இதுல என்ன இருக்கு! அவங்கம்மாவை அவங்க பார்த்துக்கறாங்க. எல்லாம் தெரிஞ்சேதானே லவ் பண்ணிக் கலியாணம் பண்ணீங்க! ஏழு வருஷம் அவ்வப்போது நீங்க சொல்ற அட்வைஸ் சரியாக இருந்திருந்தாலும் கூட... ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையை அவங்களுக்குள்ள ஏற்படுத்தியிருக்கக் கூடும் அல்லவா? அதுவும் நீங்க சொல்லாம எதுவும் செய்றதில்லை என்று அவங்க இருக்கிறதுக்குக் காரணமா இருக்கலாம்.

இப்போ கூட, அவங்க நினைச்சிருந்தா, "என்னால உடம்புக்கு முடியல. என் வீட்ல இருந்தால்தான் நல்லது," என்று சொல்லி இருக்கலாம். அவங்க சொல்லல. சரின்னு வந்து குழந்தையைப் பார்த்துக்கறாங்க. எனக்கு அவங்களை நினைக்க பரிதாபம்தான் வருது.

நீங்க ஸ்ட்ரிக்ட் என்கிறது நல்ல விஷயம்னு நீங்க நினைக்கிறீங்க. உறவுகள் ஸ்கூல் போலவோ மிலிட்டரி போலவோ இல்லை. ஃப்ளெக்ஸிபிளா இருக்கணும். அவங்க உங்க சொல் கேட்க நீங்க டீச்சரும் அவங்க ஸ்டூடண்ட்டும் இல்லை. வயதானவங்களுக்கு என்று இல்ல, யாரானாலும் இதமாப் பேசினாத்தான் பிடிக்கும். தங்களுக்கு சாதகமாப் பேசினா இதமா இருக்கும். அல்லாம சரியானதைச் சொல்றேன்னு பிடிக்காததைப் பேசினா.... ;)) இப்போ... உங்க மனசுல இமா மேல சின்னதாவாச்சும் கரகரன்னு வரலயா! அது போலதான் இருக்கும். :-) மனுஷ இயல்பு இது. தப்பு இல்லை. :-)
~~~~~~~~~~~~
கொஞ்சம் பாரா பிரிச்சு எழுதியிருக்கலாம் நீங்க. நீள...மா இருக்கிறது, படிக்க கண்ணுக்கு கஷ்டமா இருக்கு. :-)

இன்னும் சொல்லணும்னு தோணுது. வீட்டு வேலைல்லாம் முடிச்சுட்டு தூங்க முன்னால நேரம் கிடைச்சா வரேன்.

‍- இமா க்றிஸ்

ungal padhivirkku mikka nandri imma amma. neengal solluvadhu enakku purikiradhu. aanal avunga ellakittayum idhey madhiri irundha naan edhum kandukka mattene matravargalidam nalla than pesuraanga. enga veetula washing machine eppadi operate panradhunu engakitta kekama pakkathu veeetula ullavungakitta kekuraanga apa avunga enna ninaipaanga. indha madhiri neraya. adhu than koncham kastama irukudhu. avunga nallavunga than but avunga engitta nadandhukiradhu than enakku koncham kastama irukudhu.

neenga sollura madhiri enga lifela endha restrictionum poda mataanga. neenga solluradhu ellam ok ellarukkum space irukanum than adhukaaga pasicha kooda sapida matene ninga solluravaraikum nu irukiradhu than ennala yethuka mudiyala adhulayum vayasanavunga morning seekirame elundhuduvaanga adhunaala pasicha seekiram sapidunganu solluradha kooda avunga thappunu eduthukiradhu than puriyala.

kandippa avunga family problems pathi therinchu than marriage panikitene. avungalukku ellame naan panna ready marriage mudinchu 2 yrs baby vendamnu mudivu senchom bcoz avunga veetula ulla kadan adaikiradhukaaga. also ippa naan jobku vandhirukiradhum en nathanarku marriage pannanum so husbandku koncham helpa irukumnu than. enakku en ponna vitutu poga manase kidaiyadhu naanga indha madhiri ellame avungalukku panniyum kooda avunga urimaiya iruka matingiraanga. also avunga veetula ullavungalum poruppa iruka matingiraanga adhu than enakku sila time koncham kovam varum.

pillainga eppadi padikiraanga enna padikiraanga edha pathiyum avunga kettuka mattaanga edhavadhu en husband ketta naan padikadhava enakku enna theriyumnu solluvaanga en husbandoda brother,sisterum en husbandkitta directa solla mataanga en mamiyar moolama than solluvaanga ketta thittuvanga bayamnu solli enga mamiyar samalichuduvaanga. oru time ippadi than en sister in law arrear vachutanu en husband thittunadhukku ivunga padika vaikiradhu naala thana ippadi solluranganu ava solliruka. avungala porutha varaikum money kekum podhu kudukanum avalavu than.en husbandoda brother innum arrears mudikala en nathanar arrear vachu ippa than clear paniruka.

naan startingla padikalena enna namma ninacha ellame kathukalamnu avungata solli avungalukku watchla time paaka,landlinela irundhu eppadi call panradhu ellame solli kuduthene but she is not interested. solli kudukum podhu mm mm nu solluvaanga adhukku appuram keta enakku theriyalenu solliduvaanga. so naanum vitutene.

naan avungala kurai sollanumnu think pani seyyala marriage aana pudhusula avungalukku edhume theriyadhadhunaala avungalukku solli theriya vaikalaamnu than solla start paninene but ethane time sonaalum avungalala adha seyya mudiyala so enakkum thirumba thirumba solla erichal vara aarambichuduchu avungalukkum naan kurai solluradha thonudhu.
but now I stopped everything neenga eppadi vena irundhukonganu.

avunga oorula eppadi vena irukattum inga enakku kitchen koncham neata irukanum avungalukku idhellam theriya matingudhu naan sonaalum avunga adha kooda thappa than eduthukiraanga naan solluradha idhellam oru visayama appadinu than ninaikiraagale thavira ohh ippadi than vachukanumaanu ninaika matingiraanga.naan eppadi avungalukku puriya vaikiradhu.

நீங்க‌ நான் இப்படி சொல்லுரேனு தப்பாக‌ நினைக்க‌ வேண்டாம்..நீங்க‌ அவங்கள‌ பத்தி ஒரு நல்ல‌ விசயம் கூட‌ சொல்லவே இல்லை.அவங்க‌ என்னதான் படிக்காதவங்களா இருந்தா கூட‌ அவங்களுக்குனு ஒரு விசயம் நல்ல‌ படியாக‌ தெரிஞ்சு இருக்கும். நீங்க‌ ஒரு தடவைக்கு இரு தடவை அன்பாக‌ சொன்னால் புருஞ்சுப்பாங்க‌.சப்போஸ் புரியலைனா எதுக்கு கம்பல் பன்ரீங்க‌. அவங்களுக்கு என்ன‌ வேலை தெரியுமோ அதை மட்டும்மாவது அவங்க‌ செய்யட்டுமே.ஒரு தாய் தன் பையன் வீட்டுலா நினைத்தப்படி சாப்பிட‌ கூட‌ மாட்டுக்காங்கனா.அவங்க அந்த‌ இடத்துலா பிரியா இல்லைன்னுதானே அர்த்தம்.ஆனால் நீங்க‌ என்ன சொன்னாலும் அவங்க‌ கேக்குறாங்க‌ அப்படிங்க‌ போது நீங்க‌ தெரிஞ்ச‌ வேலை சொல்லுங்க‌ பாப்பா பாக்க‌ சொல்லுங்க‌..அவங்ககிட்ட‌ சாப்பாடு கொடுத்து இதை பாப்பாவுக்கு கொடுங்க‌. சொலுங்க‌.நீங்க‌ ஸ்ட்ரீட் அன்டு திருத்துரேன் ங்குற‌ பேருல‌ அவங்க‌ என்ன‌ செஞ்சாலும் குத்தம் சொல்லுரீங்க‌ அப்புறம் எப்ப்டி அவங்க‌ செய்வாங்க‌..நீங்க சொன்ன‌ அவங்க‌ செய்ராங்க‌ள அப்ப‌ நீங்களவே சொல்லுங்க‌ அத்தை காய் கட் பன்னி குடுங்க‌. நான் பாப்பா பாத்துகிட்டு இருக்கேன் உங்க‌ பையனுக்கு சாப்பாடு வைய்ங்க‌ அப்படினு. அப்புறம் உங்க‌ நாத்தினார் அவங்க‌ பீரியாக பேசலைனா என்ன‌ நீங்க‌ பீர்யா பேசுங்க‌ கேளி பன்னுங்க‌ உங்க அண்ணன் கிட்ட‌ கேக்கலைனா என்ன‌ என் கிட்ட‌ கேளு சொல்லுங்க‌..உங்க‌ அத்தை கிட்ட‌ தம்பி (கொழுந்தனார்) படிச்சு நல்ல‌ வேலைக்கு போனா அவரும் தம்பியும் சேர்ந்து அவளுக்கு நல்ல‌ இடத்துலா பாக்கலாம்ல‌ அத்தைனு சொல்லுங்க‌..அப்புறம் அவங்க‌ செட்டில் ஆயிட்டாங்கனா நம்ம‌ வீட்டுக்கு நல்லது கெட்டதுக்குதானே வரப்போறாங்க‌.. இவ்வளவே சொல்ரேனு தப்பா நினைக்காதிங்க‌ அக்கா எனக்கு பெரிய‌ எக்ஸ்பிரியன்ஸ் எல்லாம் கிடையாது எனக்கு மேரெஜ் ஆகி 2 வருஸம் தான் ஆகுது. நான் வேலைக்கு போரதுனால‌ அம்மா வீட்டுலாதான் இருக்கேன்.என் கணவர் பாரின்ல‌ இருக்காங்க‌ நான் நல்ல நாளுக்குதான் ஊருக்கு போவேன் எங்க‌ மாமியார் வீட்டுக்கு எனக்கு 2 நாத்தினார் இருக்காங்க‌ 1 மச்சான் இருக்காங்க‌. என்னனோட‌ மச்சானுக்கு மேரெஜ் ஆகிட்டாதால் அவங்க‌ எதுவுமே பாக்கல‌.என் கணவர் பாரின் போகி 2 சிஸ்டர்ஸ் மேரெஜ் பன்னி இப்ப‌ வரைக்கும் அவர்தான் பாக்குறாரு எது சொன்னாலும் கேக் மாட்டாங்க‌. நம்மள விட்ட‌ யாருனு சொல்லுவாங்க‌ நானும் ஆளுக்கொரு இடத்துல‌ இருக்கோம்னு சொல்லி விட்டுடுவேன். அப்படி நான் ஏதாவது சொல்ல‌ வந்தாலும் எங்க‌ அம்மா சொல்ற‌ வார்த்தை பெண் பிள்ளைங்க‌ தாய் தகப்பனாரு இருக்குற‌ வரை வருவாங்க‌ நீ அவங்கள‌ பத்தி எதுவுமே பேச‌ கூடாது முஞ்சி சுண்டக் கூடாது.அவங்க‌ அப்பா அம்மா இல்லைன்னா உன் வீட்டுக்கு அதாவ்து அவ‌ அண்ணன் வீட்டுக்கு வந்தானா உன் வீட்டுலா இருக்குற‌ சாப்பாட‌ தானே சாப்பிடவா அவன் அண்ணனவா பிடுங்கிட்டு போவா அதனால‌ நீயும் எதுவுமே சொல்லாத‌ நு சொல்லுவாங்க‌..அதை நானும் ஊருக்கு போனாலும் எங்க‌ தாத்தா (மாமானார்), மாமி சந்தோச‌ படுற‌ மாரி ஏதாவது பேசி வைச்சுருவேன்..அத்தை பூரிக்கு கிழங்கு வைச்சுங்கிளே சூப்பர்..அப்படினு எங்க‌ அத்தையும். தாத்தாவும் அவ்ங்க‌ பொன்னுங்கள‌ வீட‌ என்ன‌ நல்ல‌ வைச்சுப்பாங்க‌. அப்புறம் என் கிட்ட‌ தாத்தா அவள‌ நல்ல‌ பேசுவாங்க‌..எங்க‌ அம்மா வீட்டுக்கு என்ன‌ பாக்க‌ வந்தாங்க‌ 2 அல்லது 3 நாள் தங்காம‌ போக‌ மாட்டார் அத்தையும் அப்படிதான் அவங்க‌ பொன்னுங்க‌ வீட்டுலா கூட‌ போகி இருக்கமாட்டார்.போனாலும் காலையில‌ போயிட்டு மாலை வந்துருவாரு.என்ன நல்லனாலுனா கூட்டிட்டு போக‌ முதல் ஆள‌ வந்துருவார்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

//enakkum enga mamiyarala problem than// :-) நீங்க த்ரெட் போட்டது, உங்க மேல ஒரு நல்ல அபிப்பிராயத்தைக் கொடுக்குது. நிலமையை சரிபண்ண உதவக் கேட்கிறீங்க. நல்ல விஷயம் சங்கீதா.

//.enga mamiyar veetula en husband than ellam paathukiraanga.// நீங்க இது விருப்பமில்லை என்று உங்க கணவரைத் தடுத்து இருக்கலாம். உங்களுக்கு உதவி செய்றது பிடிக்குது. ஆனா... இதற்காக அவங்களை சின்னப் பசங்களை டிசிப்ளின் பண்ற மாதிரி அட்வைஸ் பண்றது சரியில்லைன்னு சொல்லத் தோணுது. இது... ம்... நான் நினைக்கிறதை எழுதினா தப்பாகிரக் கூடும். வார்த்தைகளைத் தேடிட்டு இருக்கேன். சரியா வந்து விழுந்தா இமாவும் லக்கி; நீங்களும் லக்கி. :-)

//so en husbandku ellarum koncham payapaduvaanga. // இதுவும்... புரியல. ஏன் பயப்படணும்! என் பையன் என் வீட்டுல எல்லாம் பார்த்துக்கிட்டா, அதுக்காக அம்மா நான் பயப்படுணுமா?

ம்... வருங்காலத்தில் எப்பவாச்சும் உங்க பையன் வளர்ந்தப்புறம், உங்களுக்காக எல்லாம் பார்த்துக்கிட்டா... நீங்க உங்க பையனுக்குப் பயப்படுவீங்களா? நான்னா பெருமைப்படுவேன். எத்தனை பேருக்கு இப்படி ஒரு பையன் கிடைப்பாங்க சொல்லுங்க! உங்க பையன் இப்படி நடந்தா... நீங்க கூட பெருமைப் படத்தான் செய்வீங்களே தவிர அவனுக்கோ அவன் மனைவிக்கோ பயப்பட மாட்டீங்க.

அப்படி மகனுக்குப் பயப்படுற ஒரு நிலை வருமானால் முதியோர் இல்லம் போய்ரலாமான்னு மாமியாருக்குத் தோணிரலாம். போய்ட்டாங்கன்னு வைங்க, அப்போதும் உங்களுக்குத் தோணும்... "நான் எப்பிடில்லாம் பார்த்தேன்! நன்றியேயில்லாம இப்படி ஊரார் என்னைப் பேசுற நிலமைல வைச்சிட்டாங்களே!" என்று.

அவங்க நிலமை திரிசங்கு சொர்க்கம். அவங்க என்ன பண்ணாலும் இனி தப்புத்தான்.

நீங்க அவங்க இடத்துல இருந்தா... மகன் உங்களைப் பார்த்துக்கிறாங்க என்கிறதுக்காக பிடிச்சுதோ பிடிக்கலையோ, மருமகள் சொல்றதையெல்லாம் கேட்பீங்களா? ஆமாம்னு சொன்னா.... அதைத்தான் இப்போ உங்க மாமியார் பண்ணிட்டு இருக்காங்க. தப்பு இல்லை. காரணம் மகன் மேல உள்ள பாசம்.

"இல்லை, என் பையன் எனக்குப் பண்றான் இவங்க யாரு கேட்க! நான் என் இஷ்டப்படிதான் நடப்பேன்," என்று பதில் சொல்வீங்களா இருந்தா... பிரச்சினை வந்துரும். அதை உங்க மாமியார் பண்ணல. நல்லவங்க அவங்க.

// adhey madhiri enga veetula ullavungala nee than koncham change pannanumnu en husband sonaanga.// :-) ம்... இது உண்மையானால்.. உங்க கணவர் சரியில்லை. தெளிவாக முடிவு எடுக்க இயலாமல் உங்களைப் பயன்படுத்துகிறார். ;( அவரால முடிஞ்சா சந்தோஷமா அம்மாவைப் பார்த்துக்கணும். அதற்கு ஏற்ற மாதிரி உங்களை மாற்றப் பார்த்திருக்க வேணும். அல்லது அம்மா பிரச்சினைக்கு ஒரு வழி பார்த்து செட்டில் செய்துவிட்டு பிறகு தனக்கு ஒரு குடும்பத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். அங்கும் நல்ல பிள்ளை, இங்கும் நல்ல பிள்ளை பெயர் எடுக்க விரும்புகிறார். :-)

//naan enga veetula valandha vidham// எல்லாத் தம்பதிகளும் இப்படித்தான். கணவர் அவங்க வீட்ட வளர்ந்த விதமும் மனைவி வீட்டில் அவர் வளர்ந்த விதமும் வேறு வேறாகத்தானே இருக்க முடியும்.

//so adhaye naan en mamiyar kittayum expect panrene // எக்ஸ்பெக்ட் பண்றீங்களா!! இது என்ன நியாயம்னு புரியல! நீங்க எந்த விதத்துல அவங்களுக்கு சுப்பீரியர்!! யார் கொடுத்தது இந்த உரிமை!! இதை உரிமைன்னு கூட என்னால எடுத்துக்க முடியல. ஒரு வகையில்... அடிமைத்தனமாகப் படுது. இப்படிச் சொன்னதுக்கு என்னை மன்னிக்கணும். பணம்... படிப்பு... சம்பாத்தியம்... அறிவு... அது உங்களுக்கும் உங்க மாமியாருக்கும் இடைல சுவரா நிக்குது. ;( இந்த அளவுக்கு இடம் விட்டது.. உங்க கணவர். ;((

மாமி உங்க போக்குல இருக்கணும்னு நினைக்கிறீங்க. வருங்காலத்தில் ஒரு மருமகள்... உங்க பாஷைலயே கேட்கிறேன்... //so adhaye naan en mamiyar kittayum expect panrene // என்று எக்ஸ்பெக்ட் பண்ணினா!! உங்களால இறங்கிப் போக முடியுமா! முடியாதுல்ல!!

//avunga family nalladhuku thana solluromnu // உங்க ஃபாமிலி நலத்தைக் கெடுத்துக்காதீங்க. விட்டுருங்க. உங்க நேரடிக் குடும்பத்தை முதல்ல பாருங்க. //advice paninene // :-) இந்த வார்த்தை இடிக்குது. அட்வைஸ் என்கிற வார்த்தையை விட்டு வேறு தெரிந்திருக்கலாம். :-) //ella veetulayum mamiyar than advice panuvaanga// :-) இல்லையே! அவங்களும் "அட்வைஸ்" பண்ணாம இருக்கிற வீடுகள் நிறைய இருக்குங்க. :-)

//avunga kurai solluradha ninaika start paninaanga // அப்படி உங்கள்ட்டயோ உங்க கணவர்ட்டயோ சொன்னாங்களா? நீங்க அவங்க சொன்னதா எங்கயும் சொல்லல. //naan edhum directa solluradhu kidaiyadhu // இண்டைரக்ட்டா சொல்லுவீங்களா? அது இதைவிட மோசமான விடயம். ;(

//enna pathi avungala thappaana impression vachikittu adhu madhiriye nadapanga.// அவங்க நினைக்கிறது உங்களுக்கு எப்படிங்க தெரியும்!! யார்ட்டயாச்சும் சொல்லியிருக்காங்களா?

//enga veeetukku vandha avungalukku pasicha kooda sapida mataanga avunga payan sapidumanu sonna than sapiduvaanga // இதுக்குக் காரணம் நீங்க. 7 வருஷத்துல நெருக்கம் இல்லாட்டா கூட இப்படி ஒரு இடைவெளி இருக்குன்னா... நீங்களும் உங்க கணவரும் அவங்களை நடத்தின விதம்தான் காரணம். ஒருவேளை... "அவங்க பையன் வீடுன்னு என்னைக் கேட்காம தன் இஷ்டத்துக்கு எடுத்துப் போட்டு சாப்பிடுறாங்க," அப்படின்னு நீங்க சொல்லிட்டா! தப்பாகிரக் கூடாதுங்கற எச்சரிக்கையுணர்ச்சிதான் எனக்குத் தெரியுதுங்க.

//avunga edho third person veetula iruka madhiri nadandhupaanga.// காரணம் நீங்கதான். எப்போதும் அட்வைஸ் பண்ணிப் பண்ணி போதும்னு ஆகிருக்கும் அவங்களுக்கு. சொன்னா மட்டும் பண்ணுவோம். எதுக்கு பிரச்சினைன்னு இருக்காங்க.

//adhey madhiri avungala endha velaiyum seyya mataanga // எப்பிடிங்க முடியும். நீங்கதான் நிறைய எக்ஸ்பெக்ட்டேஷன்ஸ்ஸோட இருக்கிறீங்களே!!

//naan edhavadhu velai seyya start panina udane kudu naan seyyurenu vandhu kepaanga // ஆஹா! எவ்வளவு நல்ல விஷயம் இது. சந்தோஷமா ஏத்துக்கணும் நீங்க. //adhukkum kovichupaanga.// சரியான காரணம் சொல்லிட்டீங்கன்னா ஏன் கோச்சுக்கப் போறாங்க. புரிஞ்சுப்பாங்க. அடுத்த தடவை எதனால ஹெல்ப் வேணாம்கறீங்கன்னு தன்மையா சொல்லுங்க.

//avunga village naala // :-) இது... சரியில்லை. ஒரு காலத்துல வில்லேஜா இருந்தெதெல்லாம்தான் இப்ப சிட்டி ஆகிருக்கு. தோணுறதை சொல்றேன்... உங்களுக்கு எல்லாவிதத்துலயும் ஒரு சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருக்கு. இது உறவுக்கு மட்டுமல்ல நட்புக்கும் சரிவராது.

//avungalukku neraya visayangal theriyadhu // ஆனா அவங்களுக்கு ஒரு விஷயம் தெரியுது. தன் பையன் நல்லதுக்காக பிடிக்காததையும் பொறுத்துக்கத் தெரியுது. எல்லாச் சமயமும் இல்லாட்டாலும் பல சமயங்கள்ல பொறுத்துக்கிறாங்க. இது... எங்களைப் போல சிட்டி ஆட்களை விட வில்லேஜ் ஆட்களுக்கு நல்லாவே வரும்.

//so avungalukku theriyadha visayatha sonaalum avunga adha kadhu kuduthu appadiyama appadinu keka mataanga.// :-) ஈஸி அட்வைஸ் யாருக்கும் பிடிக்கிறது இல்லை. இப்போ என் அட்வைஸ் உங்களுக்குப் பிடிக்காத மாதிரி. (ஆனா நீங்க கேட்டதாலதான் நான் சொல்றேன்.) ஒரு வேளை நீங்க சொல்றது அவங்களுக்கு உண்மைலயே தெரிஞ்சுக்கத் தேவையில்லாத விடயமாக இருக்கலாம். சுவாரசியம் அவங்களுக்கு வரல. அதுக்கு என்ன பண்றது! அவங்க ரசனைக்கு உட்பட்ட விஷயமா இருந்தா, appadiyama appadinu கேட்டு இருக்கக் கூடும்.

//ippa naan job poradhunaala en 2.5 yrs ponna pathuka vandhirukaanga // அவங்களா வந்திருக்காங்களா இத்தனைக்கும் பிறகு! எவ்வளவு பொறுப்பான, பொறுமையான மாமியார்னுதான் சொல்லத் தோணுது. இல்ல.. நீங்களோ உங்க கணவரோ கேட்டு அழைச்சு வந்தீங்களா? அப்படியானால்.. உங்க காரியம் ஆகணும்னா நீங்கதானே அவங்க போக்குக்குப் போகணும்!

//but naan avungalukku ellame nalla seyyurene // இல்லைங்க. இதை அவங்க சொல்லணும். முடிஞ்சா மனசா அவங்க வாயால சொல்ற மாதிரி நிலமையை உருவாக்குங்க. நீங்க சொல்லாதீங்க. //weekendla nalla samayal pani tharene// மனசு சந்தோஷமா இருந்தா வெறும் சாதமானாலும் வயிறார சாப்பிடுவாங்க. சந்தோஷமில்லாம இருக்கிறப்ப விருந்தும் விருப்பமில்லாமல்தான் இருக்கும்.

// velila enga ponaalum kottitu povom but edhavadhu sapida vaangi kudutha adhu ennanu kooda keka mataanga adhey madhiri engaachum kootitu pona idhu enna idam edhume keka mataanga. // இது ஒரு குற்றமா! என்னங்க இது! அவங்களுக்கு என்ன வயசு! அதை நீங்க சொல்லல. மாமா இருக்காங்களா? எங்க இருக்காங்க? இன்னும் கலியாணமாகாம எத்தனை பேர் வீட்ல இருக்காங்க? அவங்க அம்மா / அத்தை இருக்காங்களா? வேற என்னென்ன பொறுப்புகள் உங்க மாமியாருக்கு இருக்கு? ப்ரெஷர், சுகர், தலைவலி, கால்வலின்னு ஒண்ணுமே இல்லையா? அது என்னன்னு கேட்டா... "நம்பிக்கையில்லையா? கூடாததையா கொடுப்போம்!" என்று உங்களுக்கு நினைக்கத் தோணும். ரசனை, சுவாரசியம் என்கிறதெல்லாம் ஆள் ஆளுக்கு வித்தியாசம். உங்களுக்குப் பிடிச்சது அவங்களுக்குப் பிடிக்கணும் என்று இல்லை. தப்பா நினைக்காதீங்க.

//key kudutha pommai madhiri irupaanga.// இருக்கட்டுமே! // avunga oru urimaiyoda irukanumnu naan expect panrenu // இல்லை. எப்படி இரண்டுமே எக்ஸ்பெக்ட் பண்ணுவீங்க? ஒரு சமயம் ஒரு விஷயத்தை மட்டும் எக்ஸ்பெக்ட் பண்ணுங்க. ஒண்ணு அவங்க அவங்களா இருக்கணும்னு எக்ஸ்பெக்ட் பண்ணணும். இல்லாட்டா அவங்க நீங்க விரும்புற மாதிரி இருக்கணும்னு எக்ஸ்பெக்ட் பண்ணுங்க. ரெண்டு மாதிரியும் இருக்க முடியாது அவங்களால.

//sila time enakku romba erichala varudhu // ம்.. ஈஸி. மாமியாரை அவங்க வீட்டுக்கு அனுப்பிருங்க. பாப்பாவைப் பார்க்க வேலைக்கு ஒரு ஆளை எடுங்க. (நீங்க எத்தனை சம்பளம் கொடுத்தாலும் வரவங்க நீங்க எதிர்பார்க்கிறது போல இருக்க மாட்டாங்க என்கிறது வேற விஷயம்.)

//en husband marriageku appuram than romba poruppa mari irukaanga // ம். கணவரைக் கூட நல்லா சொல்ல முடியலயா! //samayal panina nalla iruka edhume keka mataanga // பயப்படறாங்க.. உங்களுக்கு இல்ல, பிரச்சினை வரப்படாதுன்னு. :-)

//avunga edhu samachaalum nalla than irukunu ninachukuvaanga but mosama irukum.// ம்... இதுக்கும் ஈஸி சொல்யூஷன் சொல்றேன். காலைல வேலைக்குக் கிளம்ப முன்னாடி நீங்களே சமையலை முடிச்சு வைச்சுட்டு போய்ருங்க. அல்லது, சமையலுக்கு ஒரு ஆளைப் பிடிச்சுக்கங்க. சூப்பரா சமைப்பாங்க. மளிகைப் பொருட்களும் சிக்கனமாகச் செலவாகும். நல்லா இல்லாட்டா சமையல் ஆளை குறை சொல்லிப் பாருங்க, அப்போ தெரியும்.

// kurai solla koodadhu adhayum accept panika mataanga. // ம்... இப்ப இமா உங்களை குறை சொல்றேன்னு வைங்க. உங்களால ஆக்செப்ட் பண்ண முடியுமா? இல்லைன்னு சொல்ல ஒரு காரணமாச்சும் சொல்லணும்னு தோணலயா? :-) இது எல்லாரிடமும் உள்ள மனநிலைதான். என்னிடமும் இருக்கு.

//sila time salt neraya pottiruvaanga // டெய்லி இல்லைல்ல! ஆமாம், நீங்க ஒரு நாள் கூட சமையல்ல உப்பு அதிகம் போட்டதே கிடையாதா? அவங்க உங்க வேலையாள் இல்லை. மாமியார். நீங்க எப்ப என்ன சொல்வீங்கன்னு எப்பவும் டென்ஷன்ல இருக்காங்க போல இருக்கு. மனசுல யோசனை ஓடிட்டு இருக்கிறப்பதான் உப்பு அதிகமா கொட்டி வைக்கும். :-) சும்மா சொல்லல. உண்மை இது.

//thaniya irundha endha problemum illa // பொய் சொல்லாதீங்க! :-) இருந்துச்சே! பாப்பாவைப் பார்த்துக்க ஆள் இல்லாத ப்ராப்ளம். முன்னால எப்படி வேலைக்குப் போய்ட்டிருந்தீங்க!

// enga mamiyar vandha adikadi engalukulla sandai varudhu // அவங்களை அவங்க வீட்டுக்கு அனுப்பிருங்க. அவங்களும் நிம்மதியா இருப்பாங்க, உங்களுக்கும் நிம்மதி.

அவங்க திருப்பிப் பேசல. கோபிச்சிட்டுப் போகல. பிடிக்குதோ இல்லையோ இருக்காங்க. பாவம்ங்க. ;( முடிஞ்சா உங்க அம்மாவைக் கூப்பிட்டு வைச்சுக்கங்க. அது எல்லாவற்றுக்கும் நல்ல மாற்றாக இருக்கும்.
~~~~~~~~~
இது சங்கீதா திரும்ப போட்ட போஸ்ட் பார்க்க முன்னால தட்டினது. கடைசி போஸ்ட் படிக்கல இன்னும். குட் நைட். (ப்ரூஃப் ரீட் பண்ணாம, எடிட் பண்ணாம போட்டுட்டுப் போறேன்.) நாளை இரவு நேரம் கிடைச்சா படிச்சுப் பார்க்கிறேன்.

சங்கீதாவின் தமிங்கிலம் சூப்பர். ரொம்ப தெளிவா எழுதறீங்க. ஆப்ரிவியேஷன்ஸ் இல்ல, ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இல்ல. பாராட்டுக்கள். அதனாலதான் இத்தனையும் படிக்க முடிஞ்சுது. நிச்சயம் மொபைல்ல தட்டல நீங்க. தமிழ்ல தட்டி இருக்கலாம். பாரா பிரிச்சுப் போட்டிருக்கீங்க இப்போ. :-) நன்றி சங்கீதா. :-)

‍- இமா க்றிஸ்

enga athai pathi nalla visayangal sollave ilenu soninga avungala pathi nalla visayamna idhu than namma sonna sonna udane endha velaiya irundhaalum seyyuvaanga matenu solla mataanga. idha thavira vera enna solluradhunu enakku theriyala avunga engitta palaguna varaikum idhu than.

en husbandoda thambi pathi ellam neraya time porumaiya sollitene ninga sonna madhiriye than naanum sonene adhukku avunga avan appadi irukaan adhukku naan enna panna muidyumnu solluraanga. idhukku mela avungata enna pesa sollunga.

unga mamiyarkitta avungalukku theriyadha oru visayatha sonna avunga eppadi reply panuvaanga sollunga sarima appadiya indha madhiri thana pannuvanga aana ivunga endha reactionum kuduka mataanga avungalukku purinchucha puriyalaya edhume solla mataanga naan ennanu ninaikiradhu sollunga. adhey madhiri avungalukku theriyadhadha kettu therinchukave mataanga. ella ammavum generala samayal panina namma pillaingalukku pidikanum appadinu pathu pathu seyyuvaanga thane aana ivunga appadi illai samaikiradhu oru kadamai madhiri seyyuvaanga. nalla iruka nalla illaya edhume keka mataanga sila time en husband edhavadhu nalla illenu sonaalum adha accept pani appadiyapa inimel nalla pannurenu solla mataanga nalla thanapa irukudhu appadinu solluvaanga.

ஒரு தாய் தன் பையன் வீட்டுலா நினைத்தப்படி சாப்பிட‌ கூட‌ மாட்டுக்காங்கனா.அவங்க அந்த‌ இடத்துலா பிரியா இல்லைன்னுதானே அர்த்தம்// avungala yaaru freeya iruka vendamnu sonnadhu freeya irunganu than naanum en husbandum sollurom appadi avunga illama irukiradhu than ippa problem. enakku orey orey guidance mattum kudunga edhavadhu ippadi pannadhinga indha madhiri panunganu appadinu avungata eppadi solluradhu sollunga.

Tholi enaku oru visayam mattum thekiva sollunka
Unka mamiyar neenka athayavathu work seium potho or
Theriyatha visayathai neenkal avarkaluku solli kutukum pothum
Avarkal unkal mel kopam patuvarkala

Ethuvaraikum unkal eruvarukum santai vanthathu unta

ML

//so en husbandku ellarum koncham payapaduvaanga. // இதுவும்... புரியல. ஏன் பயப்படணும்! என் பையன் என் வீட்டுல எல்லாம் பார்த்துக்கிட்டா, அதுக்காக அம்மா நான் பயப்படுணுமா? // ima amma naanum adhey than avungakitta kekurenu enakkum enga mamiyar avunga payanta payapaduradhu pidikala urimaiyoda ellam kekanum idhu avunga payanoda kadamai thana idhu than problem .avunga payan than full familya paathukiradhunaala ninga sonna madhiri avunga payana pathu perumai padama payapaduranga adhunaala enna pathiyum adhey ninaipu than vachirukaanga. en husbandum familyla ellarum payapadanumnu expect pannala en husbandum kova pada mataanga.

//avunga kurai solluradha ninaika start paninaanga // அப்படி உங்கள்ட்டயோ உங்க கணவர்ட்டயோ சொன்னாங்களா? நீங்க அவங்க சொன்னதா எங்கயும் சொல்லல. // amaam neraya time engittaye sollirukaanga. ippa recenta nadandhadhu papaku milk kudukiradhukku water measurement sollikuduthene avungalukku oru naal paatha avunga measure pannamale neraya water oothi mix pannitu irukaanga naan correcta measure pani kudunga ippadi than kuduthutu irukingala appadinu ketta idhu oru visayama idhukku edhukku tension aagura idhu oru kuraiyanu kekuraanga. naan enna seyya?

enna pathi avungala thappaana impression vachikittu adhu madhiriye nadapanga.// அவங்க நினைக்கிறது உங்களுக்கு எப்படிங்க தெரியும்!! யார்ட்டயாச்சும் சொல்லியிருக்காங்களா? avunga sisterskitta ellam sollirukaanga.

//en husband marriageku appuram than romba poruppa mari irukaanga // ம். கணவரைக் கூட நல்லா சொல்ல முடியலயா! // naan en husbanda perumaiya than sollirukene naan avungala nalla guide paniruken avunga relatives ellarume sollirukaanga kalyanathukku appuram than en husband familya innum nalla pathukiraanganu before marriage avungalukku theriyadhu eppadi sikkanama irukiradhu eppadi selavu seyyuradhu edhukku importance kudukiradhunu bcoz avunga veetula valarandha vidham appadi avunga veetula ellarume appadi than idha naan kuraiya sollala idhu than unmai.matrapadi en husbandku endha ketta pazhakkum kidaiyadhu.

//avunga village naala // :-) இது... சரியில்லை. ஒரு காலத்துல வில்லேஜா இருந்தெதெல்லாம்தான் இப்ப சிட்டி ஆகிருக்கு. தோணுறதை சொல்றேன்... உங்களுக்கு எல்லாவிதத்துலயும் ஒரு சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருக்கு. இது உறவுக்கு மட்டுமல்ல நட்புக்கும் சரிவராது. // idha mattum naan yethuka mudiyadhu ima amma yena idhu varaikum naan endha friendsayum ilandhadhu kidaiyadhu bcoz of my character adhuvum avunga problema engitta sonna avungalukku oru relaxation and nimmadhi kidaikumnu ninaikira friends than irukaanga. adhey madhiri naan onnum city ponnu kidaiyadhu enakku village than romba pidikum ippa kooda villagela vivasayam pannurom naanga so andha superior complex ellam enakku kidaiyadhu.

//so avungalukku theriyadha visayatha sonaalum avunga adha kadhu kuduthu appadiyama appadinu keka mataanga.// :-) ஈஸி அட்வைஸ் யாருக்கும் பிடிக்கிறது இல்லை. இப்போ என் அட்வைஸ் உங்களுக்குப் பிடிக்காத மாதிரி. (ஆனா நீங்க கேட்டதாலதான் நான் சொல்றேன்.) ஒரு வேளை நீங்க சொல்றது அவங்களுக்கு உண்மைலயே தெரிஞ்சுக்கத் தேவையில்லாத விடயமாக இருக்கலாம். சுவாரசியம் அவங்களுக்கு வரல. அதுக்கு என்ன பண்றது! அவங்க ரசனைக்கு உட்பட்ட விஷயமா இருந்தா, appadiyama appadinu கேட்டு இருக்கக் கூடும்.// kandippa naan andha madhiri kidaiyadhu ima amma enna porutha varaikkum enna vida chinnavungala irundha kooda avunga advise nalladhuna naan kandippa kepene.neraya time adhu madhiri kettu nadandhirukene.

//ippa naan job poradhunaala en 2.5 yrs ponna pathuka vandhirukaanga // அவங்களா வந்திருக்காங்களா இத்தனைக்கும் பிறகு! எவ்வளவு பொறுப்பான, பொறுமையான மாமியார்னுதான் சொல்லத் தோணுது. இல்ல.. நீங்களோ உங்க கணவரோ கேட்டு அழைச்சு வந்தீங்களா? அப்படியானால்.. உங்க காரியம் ஆகணும்னா நீங்கதானே அவங்க போக்குக்குப் போகணும்! // avunga Inga vandha indha madhiri edhavadhu problems varum avungalukkum manakastam enakkum kastamnu ninachu than vera arrangements pannalaamnu ninachom adhukkum avunga enna koopidama vera yaaro paakuranganu solli kovichutaanga adhunaala than avungala koopitom.

//weekendla nalla samayal pani tharene// மனசு சந்தோஷமா இருந்தா வெறும் சாதமானாலும் வயிறார சாப்பிடுவாங்க. சந்தோஷமில்லாம இருக்கிறப்ப விருந்தும் விருப்பமில்லாமல்தான் இருக்கும்.// idha naan solla koodadhunu than ninachene ninga Indha madhiri mention paninadhala sollurene avunga samayal pani sapidum podha vida naan senchadha sapitta extra vaangi than sapiduvaanga. nalla sapidattum sapiduradhukku thana senchu kudukirene.
en mamiyarkku avunga family sidela endha poruppum kidaiyadhu endha health problemum illa.

// enga mamiyar vandha adikadi engalukulla sandai varudhu // அவங்களை அவங்க வீட்டுக்கு அனுப்பிருங்க. அவங்களும் நிம்மதியா இருப்பாங்க, உங்களுக்கும் நிம்மதி. // adhukkum avunga accept panika matingiraangale :)

//so avungalukku theriyadha visayatha sonaalum avunga adha kadhu kuduthu appadiyama appadinu keka mataanga.// :-) ஈஸி அட்வைஸ் யாருக்கும் பிடிக்கிறது இல்லை. இப்போ என் அட்வைஸ் உங்களுக்குப் பிடிக்காத மாதிரி. (ஆனா நீங்க கேட்டதாலதான் நான் சொல்றேன்.) ஒரு வேளை நீங்க சொல்றது அவங்களுக்கு உண்மைலயே தெரிஞ்சுக்கத் தேவையில்லாத விடயமாக இருக்கலாம். சுவாரசியம் அவங்களுக்கு வரல. அதுக்கு என்ன பண்றது! அவங்க ரசனைக்கு உட்பட்ட விஷயமா இருந்தா, appadiyama appadinu கேட்டு இருக்கக் கூடும்.// avungala porutha varaikum pudhu visayangal ellame avungalukku thevai illadha visayangal than :) for ex. time pakkuradhu , phone pannuradhu idhu kooda thevai illadha visayangalnu ninga solluvingala amma naan romba moderna romba technicala ellam edhum sollala.

adhey madhiri enga veetula ullavungala nee than koncham change pannanumnu en husband sonaanga.// :-) ம்... இது உண்மையானால்.. உங்க கணவர் சரியில்லை. தெளிவாக முடிவு எடுக்க இயலாமல் உங்களைப் பயன்படுத்துகிறார். ;( அவரால முடிஞ்சா சந்தோஷமா அம்மாவைப் பார்த்துக்கணும். அதற்கு ஏற்ற மாதிரி உங்களை மாற்றப் பார்த்திருக்க வேணும். அல்லது அம்மா பிரச்சினைக்கு ஒரு வழி பார்த்து செட்டில் செய்துவிட்டு பிறகு தனக்கு ஒரு குடும்பத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். அங்கும் நல்ல பிள்ளை, இங்கும் நல்ல பிள்ளை பெயர் எடுக்க விரும்புகிறார். :-) // en husband ninachadhu thappunu solla varingala sari namma familyla ullavungalum koncham poruppa nalla irukanum avungalukku theriyala en wife solli kuduthu koncham change aana nalladhunu ninaikiradhu thappa?

ellarum sonna padhivula irundhu onnu mattum nalla purinchukittene avunga kunam adhu thana avungala matra try panama enna venumno adha mattum seyya sollittu avungala kandukama irundhudanum adhu than nalladhu appadi illama avunga urimaiyoda freeya irukanum appadi ninaikiradhu thappunu purinchukittene. naan koncham nallava adhu than avunga ippadi irukiradhu manasu kekama avunga urimaiyoda irukanumnu expect paninene so adhu thappu koncham enna change panikanum.aana onnu mattum note panunga ima amma naan romba expect panrenu ninga sollirundhangala andha expectation naala enakku personala endha nalladhume kidaiyadhu adhunaala avungalukku than nalladhu.

nandri ima amma officela irundhu thatturadhunaala tanglishna vegama thattidalaam adhunaala than. :)

romba kovam ellam pada mataanga ellathukkum mm mm nu solluvaanga aana andha visayatha next time senchiruka mataanga ketta enakku theriyalamanu solluvaanga annaiku solli kudukum podhu sari sarinu soninganu ketta edhume solla mataanga.aana en husbandkitta idhellam oru kurainu sollura appadinu solluvaanga.

முதல்ல‌ அந்த‌ மைன்ட் செட் இருந்து வெளி வாங்க‌.அவங்க வயசானவங்க‌ இனிமே பழ்கி என்ன‌ போரோம் கூட‌ நினைக்கலாம் ஆனால் உங்களோட‌ ஆர்டர் பயந்து கூட‌ புரிஞ்சுருச்சு அப்படி சொல்லாலாம் வயசானவங்க‌ கிட்ட‌ நீங்க‌ இவ்வளவு எதிர்பார்க்குறது அதிகம் அக்கா.நீங்க‌ என்ன‌ சொன்னாலும் மறுக்காமா செய்றாங்க‌ இதை விட‌ பெரிய‌ விசயம் என்ன‌ வேனும் சொல்லுங்க‌..நீங்க‌ ரெம்ப‌ கொடுத்து வைச்சவங்க அக்கா.இல்லைனா நம்ம என்ன சொன்னாலும் அதை குத்துமா எடுத்துக்கிட்ட‌ மகன் வந்த‌ உடனே போட்டு கொடுக்குற‌ வங்க‌ மத்தியிலே இவங்க‌ எவ்வள்வு பெஸ்ட் தெரியுமா..நீங்க‌ ஏன் அவங்க‌ புண்ணாக்குறீங்க‌ இது கத்துக்கோங்க‌ அது கத்துக்கோங்க‌ நு. சிஸ்டம் எல்லார் வீட்டுலையும் இருக்கு.ஆனால் எல்லாருலையும் அதை உடனே புரிஞ்சுக்க‌ முடியாத படிச்ச‌ நமக்கே அப்படினா படிக்காதவங்க‌ அதுவும் இன்ரெஸ்ட் இல்லாத்வங்களா எப்ப்டி முடியும். சொல்லுங்க‌ நீங்க‌ பேசுறது பார்க்கும் போது இப்படிதான் இருக்கனும் இது எல்லாம் கத்துக்கனும் நு அன்பா சொல்றா மாரி தெரிய்லை ஆர்டர் போடுற‌ மாரி இருக்கு.நானும் தெரியாம் தான் கேக்கேன் பால் மிக்ஸ் பத்தி சொன்னிங்களே அப்ப்டி கூட‌ மிக்ஸ் பன்னிடாங்க‌ என்ன‌ அவங்களுக்கு தெரியாம‌ தானே பன்னாங்க‌. அப்ப்டி உள்ளவங்க‌ நீங்க‌ அவங்க‌ கிட்ட‌ எவ்வள்வு கொடுக்கனுமே அவ்வள்வு கலந்து நீங்க‌ கொடுத்து இருக்கனும்.வீட்டு சமையல் கட்டு லா இருந்து பாப்பா பால் மிக்ஸ் பன்ற‌ வரைக்கு அவங்க‌ கிட்ட‌ குறை கண்டுபிடிக்கீங்க‌ அப்புறம் எப்பிடி பீரியா பழ்குவாங்க‌ சொல்லுங்க‌..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

அவங்க‌ பழக‌ விரும்பாத‌ ஒரு விசயத்தை நீங்க‌ பழக‌ சொல்றதே தப்பு தெரியுமா.உங்களுக்கு அவங்கள‌ வைச்சுக்குறது இஸ்டம் இல்லையா அவங்கள் போக‌ சொல்லுங்க‌.நீங்களும் உங்க‌ வீட்டுக்காரரும் பாத்துக்கீரீங்கரதுக்காக் எல்லாம் விசயத்தையும் அவங்க‌ மேல‌ தினிக்குறது தப்பு

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்