கம்பங்கூழ்

தேதி: April 20, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கம்பு - ஒரு கப்
கூழ் கரைக்க‌:
வெங்காயம் - ஒன்று
தயிர் - அரை கப்
உப்பு - தேவைக்கேற்ப‌


 

கம்பை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற‌ வைக்கவும்.
கம்பு ஊறியதும் எடுத்து ஊறிய தண்ணீரை வடித்து விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து சற்று கொர‌ கொரப்பாக‌ அரைத்து 8 மணி நேரம் புளிக்க‌ வைக்கவும். (காலையில் ஊற‌ வைத்து 11 மணி போல் அரைத்து வைத்தால் இரவில் கூழ் கிண்டி விடலாம்.)
அகன்ற‌ பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க‌ வைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள கம்பு மாவுடன் ஒரு கப் தண்ணீர் கலந்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றவும். இடை விடாமல் கிண்டிக் கொண்டே இருக்கவும்.
சற்று கெட்டியான‌ பதம் (களி பதத்திற்கு) வந்ததும் எடுத்து ஆற‌ வைக்கவும். இதை 8 மணி நேரம் வெளியில் வைத்து புளிக்க‌ விட‌வும்.
அடுத்த நாள் காலையில் கெட்டியாக‌ இப்படி இருக்கும்.
கூழிலிருந்து சிறிது எடுத்து அதனுடன் வெங்காயம், தயிர், உப்பு தேவையான‌ அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும். கெட்டியான‌ கூழுடன் மீன் (அ) கருவாட்டு குழம்பு சேர்த்தும் சாப்பிடலாம்.
சுவையான‌ வெயிலுக்கு இதமான‌ உடலுக்கு குளிர்ச்சியான‌ கம்பங்கூழ் தயார்.

கம்பை சற்று கொரகொரப்பாக‌ அரைக்க‌ வேண்டும். அரைத்த‌ பின் 8 மணி நேரம் நன்கு புளிக்க‌ விட வேண்டும்.

கூழ் செய்த‌ பிறகும் 8 மணி நேரம் புளிக்க விட‌ வேண்டும். கூழ் புளித்தால் தான் சுவையாக‌ இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ டீமிற்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

நல்ல‌ சத்தான‌ குறிப்பு.சூப்பர்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

thanks musi

எல்லாம் சில‌ காலம்.....

ஹ்ம்ம் சூப்பர்ர்ர்ர் எனக்கு பிடிச்ச ரெசிபி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தேங்க்ஸ் ஸ்வர்ணா

எல்லாம் சில‌ காலம்.....

கம்பங் கூழ் ரொம்ப ஹெல்த்தி, பொறுமையா செய்திருக்கீங்க பாலநாயகி.:)

நன்றி வாணி. இது இப்டி தான் செய்யணும் இல்லானா நல்லா இருக்காது. ஆனா ஒரு தடவ‌ செஞ்சா ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். பெரிய‌ வேலையெல்லாம் ஒன்னும் இல்ல‌. ஊற‌ வச்சிட்டு அப்றம் பொருமையா அரைச்சி வச்சிட்டு அப்றம் பொருமையா கிண்ட‌ வேண்டியது தான். அப்றம் பொருமையா சாப்டணும். ரொம்ப‌ நேரம் எடுத்து லேஸியா செய்யலாம். அவ்ளோ தான். சிம்பிள்.

எல்லாம் சில‌ காலம்.....