சுபிதா கவிதைகள் - 13 - அறுசுவை கவிதை பகுதி - 31374

Kavithai Poonga

சுபிதா கவிதைகள் - 13

அழகோ அழகு !

மின்னலை விட
ஒளி அதிகமானது என்னவளின் பார்வை,
நிலவை விட பிரகாசமானது
என்னவளின் முகம்,
பூக்களின் சிரிப்பை விட
அழகோ அழகு
என்னவளின் சிறு இதழோர புன்னகை....

- M. சுபி

கண்ணாடி.....

உள்ளதை உள்ளபடி
வெளிப்படையாய் காட்டும் கண்ணாடியே...
உன்னை போலவே மனித முகத்திலும்
உள்ளத்தில் உள்ளவை
வெளிப்படையாய் தெரிந்தால் என்ன?
பல ஏமாற்றங்களும் துரோகங்களும் தவிர்க்கபடுமே.......

- M. சுபி

 
திராவக வீச்சால் பொசுங்கிய பூவுக்காக .......

திராவக வீச்சு..
நினைக்கும் போதே
நெஞ்சம் பதறுகிறதே,
பாவி, அப்படி என்ன கொடூர புத்தி
உன் மனதில்,
இவர்கள் மனித ரூபத்தில்
வாழும் அரக்கர்களோ.....
அரக்கர்கள் வாழ்ந்த காலத்தில் கூட
திராவக வீச்சு இல்லையே......
அப்படி செய்ததால்
என்ன கிடைத்தது உனக்கு?
திராவகம் பட்டால்
ஏற்படும் வலியையும்,
வேதனையும் பற்றி
ஒரு நிமிடம் நினைத்திருந்தால்
அந்த எண்ணம் தோன்றுமா என்ன,
எங்கே சிந்திப்பது
மனிதனாக இருந்தால் தானே,
அவனை என்னவென்று திட்டுவது
மிருகம் என்றால்
ஐந்து அறிவு ஜீவன்
நான் எப்பொழுது அவ்வாறு செய்தேன்
என்று என்னிடம் சண்டைக்கு வருமே.......
கொடூரன் என்று சொல்லலாமோ?
உன்னை பெற்ற தாய்க்கு
நீ செய்த காரியம் தெரிய வரும் போது
திராவக வீச்சின்
வலியையும், வேதனையையும்
அவள் வயிறு அனுபவிக்குமே.....
இனியாவது இந்த கொடூர செயலை
செய்யாதீர் மானிடர்களே ......

- M. சுபி

காற்றே !

நீ எங்கிருந்து வருகிறாய்?
என்னை இதமாய் அடிக்கடி தழுவுகிறாய்,
உன்னை காண முயன்று தோற்றுப்போனேன்
உன்னை தொட இயலவில்லை,
பிடிக்கவும் முடியவில்லை.....
என்னுள்ளே சென்று
என் இதயத்தை தீண்டிவிட்டு
சொல்லாமல் வெளியே சென்றுவிடுகிறாயே,
ஓரிடத்தில் நில்லாமல்
ஏன் அங்கும் இங்கும்
ஓடிக் கொண்டிருக்கிறாய்,
பூக்களை சிணுங்கவும்
மரங்களை ஆடவும் செய்கிறாயே எப்படி?
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும்
உயிர்வாழ்வதே உன்னால் தானே,
சூரியன் பகலிலும்
சந்திரன் இரவிலும்
மட்டுமே முகம் காட்ட
நீயோ சிறிதும் ஓய்வின்றி
கால நேரம் பாராமல் உழைக்கிறாயே........

- M. சுபி

 
வளையல்....

அழகுக்கு அழகு சேர்க்க
அவள் கையில் சேர்ந்தாயோ....
அவள் வேலை செய்யும் போது
சத்தமிட்டுக் கொண்டே என்ன செய்கிறாய் நீ,
அவள் கைகளை ஆட்டும் போது
இனிமையான இசையாய் ஒலிக்கிறாய் நீ,
வானவில்லை போல பல வண்ணங்களில்
அவளின் கைகளுக்கு மெருகேற்றுகிறாயே,
எல்லா சூழ் நிலையிலும்
பெண் அவள் வளைந்து கொடுப்பதால்
அவளுக்காக வளைந்து வளையல் ஆனாயோ........

- M. சுபி

 
 அட்மின் பாபு அண்ணா அன்ட் டீம்,

திரும்பவும் எனது கவிதைகளை வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி...

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுபி சகோ,

எல்லா கவிதைகளும் ரொம்ப நல்லா இருக்குங்க.
அழகு - நல்ல வர்ணனை
கண்ணாடி- நல்ல கேள்வி "பார்த்தால் அனைவரும் மனித வடிவம், பழகி பார்த்தால் பாதி மிருக குணம்" என்ற வரிகளை நினைவிற்கு கொண்டு வரும்.
திராவக வீச்சு - நல்ல கருத்து
காற்று & வளையல் எல்லாம் அருமைங்க.
வாழ்த்துக்கள்.

நட்புடன்
குணா

குணா அண்ணா, நன்றி

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றினா,

\\"பார்த்தால் அனைவரும் மனித வடிவம், பழகி பார்த்தால் பாதி மிருக குணம்" /என்ற வரிகளை நினைவிற்கு கொண்டு வரும்.// ரொம்ப‌ ரொம்ப‌ சரியான‌ வரிகள்னா.....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுபி

கவிதைகள் அருமை சுபி.

திராவக வீச்சு படிக்கையிலே வயிறு எரிகிறது.

காற்றை அதிகமாக ரசித்தேன். :))

கவிதையை ரசித்து படித்தமைக்கு

கவிதையை ரசித்து படித்தமைக்கு நன்றி.
//க‌விதைகள் அருமை சுபி./காற்றை அதிகமாக ரசித்தேன். :))// தான்க்ஸ் வாணி அக்கா.

//திராவக வீச்சு படிக்கையிலே வயிறு எரிகிறது.// கண்டிப்பா எரிய தான் செய்யும்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுபிதா கவிதை

கவிதை எல்லாமே நல்லா இருக்கு சுபிதா. வளையல் விளக்கம் அருமை.

உன்னை போல் பிறரை நேசி.

கிறிஸ் அக்கா,

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்க்கும் நன்றிக்கா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

arumai..arumai..

Ungal ella kavithaiyum nalla irukku..kannadi romba super..

நன்றி ஜாஸ்மின்

உங்கள் வருகைக்கும்,
முதன் முதலில் எனது கவிதையில் உங்கள் பதிவிற்க்கும் நன்றி.

என் கவிதைகள் உங்களுக்கு பிடித்ததில் சந்தோசம். நன்றி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுபி

கவிதை அனைத்தும் அருமையா இருக்கு சுபி