பானி பூரி

தேதி: April 23, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

ரெடிமேட் மினி பூரி - தேவைக்கேற்ப‌
புதினா ‍- ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை ‍- ஒரு கைப்பிடி
கொத்தமல்லி ‍- ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் ‍- ஒன்று
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - 5
பூண்டு - ஒரு பல்
உருளை - 2
கொண்டைக்கடலை - சிறிது (தேவையெனில்)
வெங்காயம் - ஒன்று
மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப‌


 

புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் தேவையான‌ தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். இந்த தண்ணீர் நீர்க்க‌ இருக்க‌ வேண்டும். உருளை மற்றும் கொண்டைக்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். மினி பூரிகளை எடுத்துக் கொள்ளவும்.
உருளை, கொண்டைக்கடலை மற்றும் பொடியாக‌ நறுக்கிய‌ வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக‌ சேர்த்து நன்கு பிசையவும். விரும்பினால் கொத்தமல்லியும் சேர்க்கலாம். அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
பூரிகளின் மேல் பகுதியில் சிறு ஓட்டை போட்டு அதனுள் சிறிது உருளை மசாலாவை வைக்கவும்.
சாப்பிடும் நேரத்தில் இதனுடன் அரைத்து வைத்துள்ள‌ புதினா கரைசலை ஊற்றி கொடுக்கவும். சுவையான‌ பானி பூரி தயார்.

கொண்டைக்கடலை விரும்பாதவர்கள் அது இல்லாமலும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அறுசுவை டீமிற்க்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

Pani poori is my fav chaat. I never made this at home.Thanks for this recipe ;)

தேங்க்ஸ் வாணி. இது ட்ரை பண்ணுங்க‌. ரொம்ப‌ ஈஸி. ரொம்ப‌ நல்லாவும் இருக்கும்.

எல்லாம் சில‌ காலம்.....

சூப்பர் பாலா பார்க்கவே நல்லா இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பரா இருக்கு பாலா.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

Super. Munbellaam seyven.. ippodhu neramillai. Azagu paarkka. Enakku sweet chutney spicy chutney serthu serve pannanum ;) saapida veetuke varaen.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி ஸ்வர்ணா. டேஸ்டும் நல்லா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி ஷீலா

எல்லாம் சில‌ காலம்.....

இது ரொம்ப‌ நேரம் ஆகாது. உருளை வேக‌ வைத்தால் போதும். 5 நிமிடத்தில் செய்திடலாம். வீட்டுக்கு கண்டிப்பா வாங்க‌. நான் ஸ்வீட் சட்னி கார‌ சட்னி எல்லாம் செய்து மேலே ஊற்றி தரேன்.

எல்லாம் சில‌ காலம்.....

hi bala neenga Pondicherry ah? me too ma... neraiya receipies tharinga very good... pondy la enga irukinga?

ஹை கோகி. நன்றிகள் பல‌. நான் பாண்டி தான். கீரபாளையம்ல‌ இருக்கேன். ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல‌. நீங்க‌ எங்க‌?

எல்லாம் சில‌ காலம்.....

nan main city la iruken ma.. saram near annamalai hotel

நீங்க‌ "மா" னு சொல்லறது ரொம்ப‌ நல்லா இருக்கு. நான் நிறைய‌ தடவை சாரம் வந்திருக்கிறேன்.

எல்லாம் சில‌ காலம்.....

appadina ungaluku therinja area than but nan unga ooruku vanthathu illa.. athu enga irukku nu thieriyathu but kelvi pattu irukken.. college la kuda padikura friends anga irunthu varuvanga

e.b office (electricity board) இருக்கு இல்ல‌. அதுக்கு பக்கத்துல‌. இந்திரா காந்தி ஸ்டேடியம் பேக் சைடு. நீங்க‌ படிக்கறீங்களா?

**college la kuda padikura friends anga irunthu varuvanga** சொல்லி இருக்கீங்க‌ இல்ல‌. அதனால‌ கேக்கறேன்.

எல்லாம் சில‌ காலம்.....