ஸ்டீம்ட் பனானா ( 6 மாத குழந்தைக்கு)

தேதி: April 23, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (4 votes)

 

நேந்திரன் வாழைப்பழம் - ஒன்று


 

வாழைப்பழத்தை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாழைப்பழத் துண்டுகளை ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும்.
சூடு ஆறியதும் தோலை நீக்கி விட்டு கத்தியால் நடுவே வெட்டி நடுவிலுள்ள விதைகளை கவனமாக நீக்கவும்.
அதன் பின்னர் பழத்தை ஒரு கரண்டியால் நன்கு மசிக்கவும். ஸ்டீம்ட் பனானா தயார். குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் உணவு இடைவெளியில் இதை கொடுக்கலாம்.

நேந்திரன் அல்லாது சாதாரண பழங்களையும் கொடுக்கலாம். விதை நீக்காமலும் மசித்து கொடுக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எளிமையான‌ அழகான‌ குறிப்பு. நடுவில் உள்ள‌ கருப்பு நிற‌ விதைகளை நீக்க‌ சொன்னது அருமையான குறிப்பு. குழந்தைகளுக்கு அது எளிதில் செரிக்காது. ஆனால் தவறாக‌ நினைக்க‌ வேண்டாம். நேந்திரம் பழங்களை இப்படி கொடுக்கலாம். ஆனால் மற்ற‌ பழங்களை வேக‌ வைக்காமல் அரைக்காமல் சாப்பிட்டால் தான் அதன் சத்து முழுதாக‌ உடலுக்கு கிடைக்கும். வேக‌ வைக்கும் போதோ (அ) அரைக்கும் போதோ அதன் சத்துக்கள் சிதைந்து விடும். தவறாக‌ கூறி இருந்தால் மன்னிக்கவும்.

எல்லாம் சில‌ காலம்.....

\\எளிமையான‌ அழகான‌ குறிப்பு.// நன்றி பாலநாயகி :)

வேக வைப்பது வாழைப் பழத்திற்க்கு மட்டும் தான் பாலா. செரிமானப் பிரச்சனைக்குத்தான், அதுவும் 6 முதல் 8 மாதம் வரைக்கும் தான். அதன் பின் சமைக்காமலே கொடுக்கலாம். இதை நான் குறிப்பிட மறந்துட்டேன். மற்ற பழங்களை நான் சமைக்காமல் தான் கொடுப்பேன், அந்த குறிப்புகளும் அடுத்தடுத்து வரும் பாலா.
நான் குழந்தைக்கு உணவுகளை அரைப்பதில்லை, மசித்து கொடுப்பது தான் வழக்கம். மசித்த படத்தை அனுப்பியிருந்தேன், டீம் இணைக்க மறந்திருக்கலாம்

\\தவறாக‌ கூறி இருந்தால் மன்னிக்கவும்.//
கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவிடுவது தவறில்லை தோழி :)

சூப்பர் . இது ஏத்தன் வாழை தானே.
நல்ல‌ குட்டீஸ் ரெசிபி

ஆமாம் நிகிலா ஏத்தன்/ஏத்தம் பழம் தான். நன்றி