friends help urgent

Chitirai matham kuzhandai piranthal yethavathu pathippu yerpaduma.enakku delivery date chitiraiyil koduthu irukirar dr.so pls help me.I am afraid about this.

பயம் வேண்டாம். அப்படி எல்லாம் எதுவுமே இல்லை. நல்லபடியாக குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள் .

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தோழி பயம் வேண்டாம். இது அந்த காலத்தில் சொல்லி வைத்தது. முன்னாடி எல்லாம் சித்திரை மாதம் என்றால் வெயில் அதிகமாக இருக்கும் அப்போ எல்லாம் மின்சாரம் கிடையாது இப்போ தான் எல்லா வசதிகளும் இருக்கே அப்புறம் ஏன் கவலை. என் தோழிக்கும் சித்திரையில் தான் குழந்தை பிறந்தது எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் கவலை வேன்டாம்.

Thanks pa

மற்ற மாதத்தில் பிறந்தாலும் வருகின்ற பிரச்சனை வரத்தான் செய்யும். நாம் சித்திரையில் பிறந்தால் கஷ்டம் என்பதை மனதில் வாங்கி கொண்டால் எல்லாமே அப்படிதான் தோன்றும். ஆதலால் குழந்தை என்பது செல்வம் (செல்வத்தை சி்த்திரை மாதம் வந்தால் யோசிப்போமா) அது எந்த மாதம் கிடைத்தாலும் நமக்கு சந்தோஷமே. சுகபிரசவமாகவும், குழந்தை ஆரோக்கியமாகவும் பிறக்க எனது வாழ்த்துக்கள்.

babies

மேலும் சில பதிவுகள்