கேழ்வரகு அடை

தேதி: April 24, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

கேழ்வரகு மாவு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
கொத்தமல்லித் தழை
உப்பு - தேவையான அளவு


 

கடாயில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதித்ததும் கால் கப் கேழ்வரகு மாவை தூவி கூழ் போல் காய்ச்சி கொள்ளவும்
அடுப்பை அணைத்து விட்டு மீதி மாவை தூவி சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
கேழ்வரகு மாவில் நறுக்கியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு உருண்டை எடுத்து சப்பாத்தியாக திரட்டவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி திரட்டிய அடையை போட்டு இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.
சுவையான ராகி அடை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

100வது குறிப்பு மனமார்ந்த‌ வாழ்த்துக்கள் ரேவ்ஸ் :) இன்னும் பல‌ 100 கொடுக்க‌ வேண்டும் என்பது எங்கள் ஆசை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

100 வது குறிப்பு :) வாழ்த்துக்கள் மக்கா..

"எல்லாம் நன்மைக்கே"

100 வது குறிப்பு ஹெல்தியான‌ குறிப்பு. ரொம்ப‌ நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் கோல்டு ஸ்டார் மெடலிஸ்ட் ரேவ்'ஸ்.

எல்லாம் சில‌ காலம்.....

Congratulations for the 100 th recipe. Keep it up Revathi :))

Super congrats Reva.. Kalakita..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

100 வது குறிப்பு கலக்கல் ரேவா :) இன்னும் பல 100 குறிப்புகள் கொடுக்க வாழ்த்துகள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

100வது குறிப்பு... சூப்பர். மனமார்ந்த‌ வாழ்த்துக்கள் ரேவ்ஸ் :) மேலும் பல‌ 100 குறிப்புகள் கொடுக்க‌ என் வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இப்பதான் கவனிச்சேன்.... 100.... வாழ்த்துக்கள்

எனது 100வது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா&அறுசுவை டீம் மிக்க நன்றி

Be simple be sample

வனி,பாலா,பாக்யா,வாணி,சுவா,சுமி,ரேவ், பிரியா உங்க அன்பு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

Be simple be sample