ப்ரோக்கலி கிச்சடி (6 மாத குழந்தைக்கு)

தேதி: April 25, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 3 மேசைக்கரண்டி
பாசிப்பருப்பு - 3 மேசைக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
பெருங்காயம் - கால் சிட்டிகை
மஞ்சள் தூள் - கால் சிட்டிகை
ப்ரோக்கலி - 3 பூக்கள்


 

ப்ரோக்கலியை வெந்நீரில் 5 நிமிடங்கள் போட்டு வைக்கவும். பின்னர் நீரை வடித்து விட்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.
குக்கரில் கழுவிய அரிசி, பாசிப்பருப்பு, ப்ரோக்கலி மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியை திறந்து ஒரு கரண்டியால் சாதத்தை நன்கு மசிக்கவும்.
சுவையான ப்ரோக்கலி கிச்சடி தயார். இந்த கிச்சடியுடன் நெய் ஊற்றி 6 மாதம் முதல் குழந்தைகளுக்கு ஊட்டலாம். காய்கறிகள் சேர்க்காத பருப்பு சாதம் குழந்தைகளுக்கு மலச்சிக்கலை உண்டு செய்யும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சத்தான ரெசிபி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அருமையான‌ கிச்சடி. நான் கண்டிப்பா ட்ரை செய்றேன்.

எல்லாம் சில‌ காலம்.....

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி தோழிகளே.:)