உருளைக்கிழங்கு காரசேவு

தேதி: February 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைகிழங்கு - 150 கிராம்
கடலை மாவு - 200 கிராம்
அரிசி மாவு- 50 கிராம்
எண்ணெய் - 300 மில்லி
டால்டா - 3 தேக்கரண்டி
வத்தல் - 6
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

முதலில் உருளைகிழங்கை வேகவைத்து தோலை நீக்கி நன்கு மசித்துக்கொள்ளவும்.

வத்தல், உப்பு, பெருங்காயம் இவற்றை சிறிது நீர்விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

மசித்த உருளைகிழங்கில் கடலை மாவு,அரிசிமாவு,அரைத்தவிழுது,உப்பு இவற்றை போட்டு டால்டாவை சூடாக்கி ஊற்றவும் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை சூடக்கவும். முறுக்கு பிழிவதில் கரசேவு அச்சில் போட்டு தேவையான அளவு மாவை போட்டு சூடாக்கிய எண்ணெயில் பிழிந்துவிடவும் பொன்னிறமாக பொறிந்ததும் எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்