ஸ்பெஷல் பாகற்காய் பொரியல்

தேதி: February 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

பாகற்காய் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
இஞ்சி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
தக்காளி - 1/4 கப்
பச்சைமிளகாய் - 4


 

முதலில் பாகற்காயை விதையை நீக்கி வட்டமாக அறிந்துக்கொள்ளவும்.

வெங்காயத்தை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.

இஞ்சியை பொடியாக நறுக்கவும்.

தக்காளியை தடிமனாக வெட்டிக்கொள்ளவும்.

பச்சைமிளகாயை இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்.

பாகற்காயை இட்லி தட்டில்வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்,பின் தேங்காய் துருவல்,இஞ்சி, உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

கால் கப் தண்ணீர்விட்டு சிறிது வேகவைக்கவும். பின் பாகற்காய், தக்காளி, பச்சைமிளகாய் இவற்றை சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.

பாகற்காய் பொறியல் தயார்.


மேலும் சில குறிப்புகள்