சிக்கன் குருமா

தேதி: April 28, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
மிளகாய்த் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க :
தேங்காய் - ஒரு துண்டு
முந்திரி - 4
பச்சைமிளகாய் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
வறுக்க :
கசகசா - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை - 2


 

வெறும் வாணலியில் வறுக்க கொடுத்த பொருட்களை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் வறுத்த பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காய தக்காளி கலவையில் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு சிக்கன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக விடவும்.
சிக்கன் வெந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கவும்
சுவையான சிக்கன் குருமா தயார். சாதம், டிபன் வகைகள் அனைத்திற்கும் பொருத்தமானது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பூரியும், சிக்கன் குருமாவும், ம்ம். ... கலக்குறீங்க ரேவதி :))

எனது குறிப்பை வெளியிட்ட அட்மிண் அண்ணா&அறுசுவை டீம் மிக்க நன்றி.

Be simple be sample

தாண்க்யூ வாணி.

Be simple be sample

சிக்கன் குருமா பார்க்கவே சூப்பரா இருக்கு. பூரி கூட‌ கலக்கல். சூப்பரா இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

தான்க்யூ பாலா.

Be simple be sample

சிக்கன் குருமா அருமைங்கோ :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Thanks swa

Be simple be sample