check up details

hi sisters,
naan 7 month pregnant. naan idhu varaikum doctor'ta pogum podhu edhuvume kelviyum kuzhandhaiya pathi kettadhe illai. parkira ellarum baby growth eppadi irukku'nu ketkiraanga. enaku doctor'kitta kekka payama irukku. avangalum edhuvum solla maatraanga. oru thadavai mattum baby weight'lam nalla irukku'nu sonnanga.
naan endha details'lam doctor kitta ketu therinchukanum. en husband'kum edhuvum theriala. naan pora doctor experienced person dhan. irundhaalum ellarum thitranga."anga pogadhe avanga normal panna matanga. operation dhan pannuvanga. vera engayavadhu po"nu solraanga. seekirama yaaravadhu pathil sollunga.naan evening doctor kitta poren. ennalam ketu therinchukamum sollunga.

//parkira ellarum// அவங்களுக்காக எல்லாம் கேட்கணும் என்கிறது இல்லை. உங்களுக்கு உங்கள் குழந்தையப் பற்றி எதுவுமே தெரிந்துகொள்ளும் ஆவல் வரவில்லையா!! அப்படியானால் விட்டுவிடுங்கள். கேட்கிறவங்களுக்கு தைரியமா, உங்களுக்கு கேட்கத் தோணல என்கிறதைச் சொல்லுங்க. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால் கேட்டு இருப்பீங்க. நம்பிக்கை இருக்கிறதாலதான் கேட்காம இருக்கீங்க.

//enaku doctor'kitta kekka payama irukku.// :-) கேட்க நினைச்சா பயந்தாலும் நீங்கதான் கேட்கணும். //avangalum edhuvum solla maatraanga.// அவங்க எக்ஸ்பீரியன்ஸ்ட் என்று நீங்களே சொல்றீங்க. ஏதாவது தப்பாக இருந்தால் நிச்சயம் டாக்டர் சொல்லி இருப்பாங்க.

//irundhaalum ellarum thitranga.// ஏதோ ஒரு காரணத்தை வைத்துத்தானே இந்த டாக்டரைத் தெரிந்துகொண்டீர்கள்? //avanga normal panna matanga.// இது உங்க கைல இல்லைங்க. //operation dhan pannuvanga.// உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை கிடைக்க வேண்டும். அதுதான் முக்கியம். எந்த வழியில் கிடைக்கிறது என்பது அல்ல.

அந்த டாக்டர் சரியில்லை என்று "எல்லோரும்" சொன்னால் வேறு ஆளைப் பாருங்க. இந்த "எல்லோரும்" என்கிற வார்த்தை பெரும்பாலான இடங்களில் ஒருவர் இருவரை மட்டும் குறிப்பிடுவதாக இருக்கிறது. அப்படி யாராவது ஒருவர் இருவர் மட்டும் சொன்னால் இத்தனைக்குப் பிறகு மாற்றாமல் விடுவது நல்லது என்று சொல்லத் தோன்றுகிறது. //vera engayavadhu po"nu solraanga.// ம்... உங்கள் மனம் என்ன சொல்கிறது? வேற "எங்கயாவது" போன பின்னால் இதே "எல்லோரும்" திரும்ப வந்து, 'வேற எங்கயாவது போ,' என்று சொன்னால் இன்னும் ஒரு டாக்டரைப் பிடிப்பீங்களா? சொன்னவர்களிடம், இப்படிச் சொல்லாமல் ஒருவர் பெயரைச் சிபாரிசு செய்யச் சொல்லுங்கள். மஜாரிடி யாரைச் சொல்றாங்க என்று பாருங்க.

ஒரு டாக்டர்ட்ட போய்ட்டு இடைல மாறுறது, மிகவும் அவசியம் என்றால் தவிர நல்லதில்லை. முதலில் பார்த்தவர் எதுவும் சொல்றது இல்லை என்கிறீங்க. உங்கள் கையில் பழைய ரிப்போர்ட்கள் கொடுத்திருக்கிறாரா? அல்லாவிட்டால் புதியவருக்குச் சிரமம்.

//ennalam ketu therinchukamum sollunga.// - //baby growth eppadi irukku'nu ketkiraanga.// குழந்தை வளர்ச்சி எப்படி இருக்கு என்கிறதைத்தான் முதல்ல கேட்கணும். பேச்சு ஆரம்பித்ததும் பிறகு இடைல உங்களுக்கு மனசுல வரும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டிருங்க.

‍- இமா க்றிஸ்

நானும் வேற‌ டாக்டர்ட்ட‌ போலாம்னு தான்னு நெனைக்கிறேன் சிஸ்டர்.

மேலும் சில பதிவுகள்