மீன் குழம்பு

தேதி: February 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (19 votes)

 

மீன் - அரைக் கிலோ
துருவிய தேங்காய் - அரைக் கோப்பை
வெங்காயம் - ஒன்றரை
பச்சை மிளகாய் - நான்கு
தக்காளி - ஒன்று
பூண்டு - ஆறு பற்கள்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - நான்கு தேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரைத்தேக்கரண்டி
சீரகம் - அரைத்தேக்கரண்டி
வெந்தயம் - அரைத்தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு கட்டு
உப்பு - மூன்று தேக்கரண்டி
எண்ணெய் - அரைக் கோப்பை


 

மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். தேங்காய் பூவுடன் அரை வெங்காயத்தை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
புளியை இரண்டு கோப்பை தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பச்சைமிளகாய், பூண்டு ஆகியவற்றை நசுக்கி கொள்ளவும். தக்காளியை புளி கரைசலில் கரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான ஒரு சட்டியில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கின வெங்காயத்துடன், நசுக்கி வைத்ததையும் சேர்த்துப் போட்டு வதக்கவேண்டும்.
பிறகு உப்புத்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் அனைத்து தூள்களையும் போட்டு நன்கு பிரட்டிவிடவும்.
சற்று வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும்.
அத்துடன் கரைத்து வைத்துள்ள புளி, தக்காளி கரைசலை ஊற்றவும்.
அத்துடன் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
குழம்பு சற்று கெட்டியானவுடன் நறுக்கி வைத்துள்ள மீன் துண்டுகளைப் போடவும்.
பிறகு அரிந்த கொத்தமல்லியை தூவி விட்டு கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
இப்போது சுவையான மீன் குழம்பு தயார்.
அறுசுவையில் இருநூறுக்கும் அதிகமான குறிப்புகள் கொடுத்துள்ள, இன்னமும் கொடுத்துக்கொண்டுள்ள திருமதி. மனோகரி ராஜேந்திரன் அவர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தற்போது வசிப்பது கனடாவில். சமையலில் நீண்ட அனுபவம் உள்ள இவர் சைவ, அசைவச் சமையல் இரண்டிலும் அசத்தக்கூடியவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ungalidam enakku pidithadhe seivadhai arumaiyaaga alangaaramaaga veliyiduvadhudhaan...suvaiyirundhaalum sariyaana alangaaram illavittal andha unavitku arthamillai.indha meeen kuzhambai paarkumbodhe naavil neer oorugiradhu..mikka nanri

ஹலோ தாளிகா, மிக்க நன்றி. தாங்கள் கூறுவதுப் போல் நிச்சயமாக அலங்காரம் இருந்தால் தான், உணவை பார்த்தவுடன் அதைச் சாப்பிடத்தூண்டும். ஆனால் நான் எந்த ஒரு சிறிய சமையற் குறிப்பாகயிருந்தால் கூட, அதை மேக்சிமம் சுவையுடன் செய்ய வேண்டும் என்று முயற்ச்சிப்பேன். ஆகவே என்னுடைய மார்க் சுவைக்குத்தான். இருந்தாலும் தங்களுடைய பராட்டை அன்புடன் ஏற்றுக் கொள்கின்றேன். நன்றி.

Hello Ms.Manohari,

We have tried the "Meen Kuzhanbu" this afternoon and it came out very well as you have given in the website. Thank you very much for your recipe.

Regards,
Meyy & Ilango

ஹலோ மெய்யரசு, ஹலோ இளங்கோ, எப்படி இருக்கின்றீர்கள்? மீன் குழம்பை செய்துப் பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்க்கு மிக்க நன்றி. சமையலில் வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலும் தயங்காமல் கேட்கவும். எனக்கு தெரிந்ததை கட்டாயம் கூறுவேன். நன்றி.

it is really a very nice receipe.it tasted good on the next day very well.

thyagu

ஹலோ தியாகு எப்படி இருக்கீங்க? சரியாக சொன்னீர்கள். நானும் எப்பொழுதும் மீன் குழம்பை செய்து, அடுத்த நாள் தான் பரிமாறுவேன்,இட்லியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். பின்னூட்டம் அனுப்பியதற்க்கு மிக்க நன்றி.

நான் இந்த மீன் குழம்பை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இதே முறையில் இறால் குழம்பும் செய்தேன். அக்குழம்பும் மிக அருமையாக வந்தது. தங்களுடைய குறிப்புகள் அனைத்தும் வித்தியாசமாகவும், சுவையாகவும் உள்ளது.

ஹலோ சுபாஷினி, எப்படி இருக்கின்றீர்கள்? இந்த குறிப்பைச் செய்துப் பார்த்தும், மற்ற குறிப்புகளை பற்றிய கருத்தும் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. மேலும் தங்களின் புதிய இறால் குழம்பின் கண்டுபிடிப்பிற்க்கு எனது பாராட்டுக்கள்.நன்றி

நான் நலமாக இருக்கின்றேன். நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? சில வேலைகள் இருந்ததால் என்னால் உடனே பதில் அளிக்க இயலவில்லை. தாங்கள் வடக்கறி செய்வது எப்படி என்பதை படத்துடன் விளக்க இயலுமா?

ஹலோ சுபாஷினி நல்லது, நானும் நலமாயிருக்கின்றேன் நன்றி. நிச்சயமாக எனக்கும் பிடித்த உணவான வடகறியை கூடிய விரைவில் படத்துடன் செய்து காட்டுகின்றேன்.நன்றி டியர்.

வடகறியை படத்துடன் செய்து காட்டுவதாகக் கூறியமைக்கு மிக்க நன்றி.

Portia Manohar
Can i add maanga for this fish kulambu,i have tried your puliyotharai,got good comments.Pls do advice.Thanks in advance.
Portia

Portia Manohar

hello aunty,

how r u? i tried this fish kuzhambu sterday. It's nice. This is the first time, i did it. Thanks for ur receipe. But i didn't use coconut. plz tell me, y coconut is added in ur fish kuzhambu?

"Patience is the most beautiful prayer !!!"

ஹலோ சங்கமித்ரா, மீன் குழம்பில் தேங்காய் சேர்ப்பது எனக்கு தெரிந்த வரையில் குழம்பின் ருசி அதிகரிக்க, கார தன்மையை குறைக்க, அதிகப்படியாக புளி சேர்க்கபடுவதால் அதன் சூட்டை தணிக்க, குழம்பு கெட்டியாக இருக்க, மேலும் தேங்காய் அதிகமாக கிடைக்கும் பகுதிக்கேற்ப என்று இவ்வாறு பல்வேறு காரணத்திற்காக தேங்காய் சேர்க்கப்படுகின்றது. எனது வீட்டில் காரம் யாரும் விருப்புவதில்லை ஆகவே பெரும்பாலும் தேங்காய் சேர்த்து தான் மீன் குழம்பு செய்வேன். நீங்களும் தேங்காய் சேர்த்து ஒரு முறை டிரை செய்து பாருங்கள். இந்த குறிப்பை செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

உங்களுடைய மீன் குழம்பு மிகவும் அற்புதம்.இதனால் என் கணவர் என்னை பாராட்டினார். thanks for your recipe.

WOW.LOOKS SOOOOOOOOOOOOO GOOD.I'M GOING TO TRY IT THIS WEEK.

ஹாய் மனோகரி அக்கா. நேட்ரு உங்கலுடய மீன் குழம்பு செய்தேன் மிக அருமையாக இருந்தது நானும் என் கணவரும் விரும்பி சாப்பிடோம். ரெம்ப நன்றி

மீன் குழம்பு சூப்பர்.

மனோகரி மேடம் நேற்று மதியம் இந்த மீன் குழந்ம்பு செய்தேன் வித்தியாசமான சுவை.

ரொம்ப நல்ல இருந்தது.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் அக்க நீங்க சொன்ன மீன் குழம்பு வைத்தேன் ரொம்ப சூப்பரா இருந்து . ரொம்ப நன்றி . எனக்கு ஒரு ஆசை கேரளா மீன் ரசம் சாப்ட அனால் எனக்கு வைக தெரியாது உங்களுக்கு தெரிந்த சொல்லுங்க .

உங்கள் அன்புடன்

சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

வணக்கம் மனோகரி மேடம்,
உங்கள் மீன் குழம்புதான் அடிக்கடி எங்கள் வீட்டில் கலக்குது. முன்பெல்லாம் எனக்கும் மீன் குழம்பிற்கும் வெகுதூரம். நன்றாக வராது. பின் உங்கள் குறிப்பைப் பார்த்துச் செய்து பார்த்தேன், மிகவும் அருமையாக வந்தது. அதிலிருந்து இறைச்சி சமைப்பதை விட அடிக்கடி மீன்குழம்பு தான் சமைப்பேன். என்ன ஒரு அருமையான சுவைமிக்க குழம்பு. பதில் போடத் தாமதித்ததற்கு மன்னிக்கவும். அறுசுவை சில காலங்களாக எனக்கு மிகவும் தாமதமாகவே வேலை செய்ததால் என்னால் பதிவு போட முடியவில்லை.
இன்றும் உங்கள் குழம்பு தான் எங்கள் வீட்டில். என்னவர் மிகவும் சுவைத்துச் சாப்பிடுவார். முன்பு மீன் குழம்பைப் பார்த்தாலே ஓடி விடுவார்.
அத்துடன் என் சந்தேகத்தையும் கேட்டுக் கொள்கின்றேன். தேங்காய் சேர்ப்பது சுவைக்குத்தான் என்று உங்கள் பதிலில் போட்டிருக்கின்றீர்கள். அதனைத் தவிர்த்து வேறு ஏதாவது சேர்த்துச் செய்யலாமா? அதிலும் இதே சுவை கிடைக்குமா? ஏன் கேட்கின்றேன் என்றால், குளிர் நாட்டில் வாழ்வதால், அடிக்கடி தேங்காய் சேர்த்துக் கொண்டால் கொழுப்புச் சத்து கூடுதல் போன்ற பிரச்சனைகள் வருமோ என்று பயமாக உள்ளது. தேங்காயைக் குறைத்துச் சேர்த்தாலும் என்னவர் இன்று தேங்காயை ஏன் குறைத்துப் போட்டதாகக் குழம்பின் சுவையைப் பார்த்தே கண்டு பிடித்துக் கேட்கின்றார்.

அன்புடன்
பிருந்தா

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த மீன் குழம்பின் படம்

<img src="files/pictures/aa114.jpg" alt="picture" />

ungal fish kulambu seithen aaha oho'nu suvaiyah irukkiruthu...mikka nandri..

indra,
malaysia..

ungaludaya meen kulzambu seithan.romba nandraga iruindadhu. nandri.